GST வரி அல்ல… வழிப்பறி! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

"பிரதமர் நரேந்திர மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!

ஏழைகளைச் சுரண்டும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை மாற்ற இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் என முதலமைச்சர் மு.க.டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், GST வரி அல்ல… வழிப்பறி! “தன் பிணத்தின் மீதுதான் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்த முடியும்” என்று முதலமைச்சராக எதிர்த்த திரு. நரேந்திர மோடி, பிரதமரானதும், “ஜி.எஸ்.டி பொருளாதாரச் சுதந்திரம்’’ என்று ‘ஒரே நாடு ஒரே வரி’ கொண்டு வந்தார். பேச நா இரண்டுடையாய் போற்றி! ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜி.எஸ்.டி.யா? ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், Bill-இல் உள்ள GST-யைப் பார்த்து #GabbarSinghTax எனப் புலம்புகின்றனர்! அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் GST கட்ட வேண்டுமா?

1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பா.ஜ.க.வால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா? ஜி.எஸ்.டி-யில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜி.எஸ்.டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜி.எஸ்.டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள். ஏழைகளைச் சுரண்டும் இந்த முறையை மாற்ற #Vote4INDIA என குறிப்பிட்டுள்ளார்.

Video thumbnail
ரசிகர்களுக்கு கையசைத்தபடியே கோட் சூட்டில் ஸ்டைலாக வந்த விஜய்
00:34
Video thumbnail
Jananayagan Audio launch-க்கு cute ஆக வீடியோ வெளியிட்ட பூஜா
00:29
Video thumbnail
என்னையும், விஜயையும் பாஜக பெற்றெடுத்தபோது திருமாவளவன் தான் பிரசவம் பார்த்தார் -சீமான்
01:03
Video thumbnail
திருவண்ணாமலைக்கு 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
02:50
Video thumbnail
மலேசியாவில் ஜனநாயகன் இசை வெளியீட்டிற்காக கூடிய கூட்டம்
00:24
Video thumbnail
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பிஜேபி வளர்வதற்கு அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தான் காரணம் - திருமா எம்.பி
01:39
Video thumbnail
கலை கண்ணாடி அல்ல; சமூகத்தை மாற்றும் சம்மட்டி - -மார்கழியில் மக்களிசை விழாவில் எம்.பி கனிமொழி பேச்சு
01:19
Video thumbnail
இங்க பா.ஜ.க.வும் அடிமைகளும் எத்தனை அந்தர் பல்டி அடிச்சாலும், பாச்சா பலிக்காது - CM மு.க.ஸ்டாலின்
01:28
Video thumbnail
கபில் தேவ், நடிகர் சிம்புவுக்கு பந்து வீசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! வைரலாகிவரும் வீடியோ!!
00:59
Video thumbnail
கிறிஸ்தவர்கள் மீது இந்து அமைப்புகள் தாக்குதல் | மௌனம் காக்கும் விஜய், சீமான் | TVK | Vijay | Seeman
13:10
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img