மக்களை தேர்தலையொட்டி சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐடி மகளிர் கல்லூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை செலுத்தினார்.
மக்களவை தேர்தலானது (2024) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில், தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவானது மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது. தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்காக 1,58,568 மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரசியல் கட்சியினர், கட்சி வேட்பாளர்கள், சினிமா பிரபலங்கள், உள்ளிட்டவர்கள் பலர் தனது ஜனநாயக கடமையை ஆற்றி வருகிறார்கள். இந்த நிலையில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை செலுத்தினார். சென்னை தேனாம்பேட்டையிலுள்ள எஸ்ஐடி மகளிர் கல்லூரியில் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரிசையில் காத்திருந்து தனது வாக்கினை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் அனைவரும் வாக்களித்து ஜனநாயகக் கடமை ஆற்ற வேண்டும். வாக்குரிமை பெற்றிருக்கும் அனைவரும் மறந்திடாமல் புறக்கணிக்காமல் வாக்கு செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.