spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூர் மக்களவைத் தொகுதியில் கே.சுப்பராயன், நாகை மக்களவைத் தொகுதியில் வை.செல்வராஜ் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

யார் இந்த செல்வராஜ் என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றியம், சவளக்காரன் ஊராட்சி கீழநாலாநல்லூர் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் வை.செல்வராஜ் (வயது 62). மன்னார்குடி அரசுக் கலைக் கல்லூரியில் பி.ஏ, பூண்டி புஷ்பம் கல்லூரியில் (எம்.ஏ.- எம்.பில்) முதுகலை கல்வி ஆராய்ச்சி பட்டம் வரை பெற்ற இவர், கல்லூரியில் படிக்கும் பொழுதே அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின், மாணவர் இயக்க தலைவராகப் பணியாற்றினார்

பின்னர் 1980- ஆம் ஆண்டு கட்சி உறுப்பினராகச் சேர்ந்து தன்னை முழுநேர அரசியல் பணியில் ஈடுபடுத்தி கொண்டார். அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் செயலாளராக அதனை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மன்னார்குடி ஒன்றிய செயலாளராக 12 ஆண்டு காலம் பொறுப்பிலிருந்து சிறப்பாக செயல்பட்டார்

மேலும் திருவாரூர் மாவட்ட ஊராட்சி உறுப்பினராக, பின்னர் திருவாரூர் மாவட்ட ஊராட்சி தலைவராக பொறுப்பேற்று சிறப்பாக செயல்பட்டார். அப்போது விவசாயிகளின் பிரச்சினையில் தீவிர கவனம் மேற்கொண்டார்.

தற்போது இரண்டாவது முறையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளராக செயல்பட்டு வருகிறார். இவரது மனைவி ஜீவரேகா நீதித்துறையில் பணியாற்றி வருகிறார், இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதில் மகள் வெண்பா வழக்கறிஞராகவும், மகன் நண்பா பட்டப்படிப்பும் படித்து வருகிறார். எளிய குடும்பத்தில் பிறந்த இவர் செயலாற்றல் மிக்க எளிய தலைவராக தன்னை அடையாளப்படுத்தி கொண்டவர்.

Video thumbnail
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை சமந்தா சாமி தரிசனம் #Tirupati #Samantha #RajNidimoru
00:55
Video thumbnail
என்னுடைய மகன் மிதுன் அரசியலுக்கு வர மாட்டார் - எடப்பாடி பழனிசாமி
01:12
Video thumbnail
தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டமன்றம் தொடங்கியது; தேசிய கீதம் பாடக் கூடாது என்பது இல்லை;
01:18
Video thumbnail
சட்டமன்றத்திற்கு ஆளுநர் அர்லேக்கர் வருகை.. பூங்கொத்து கொடுத்து சபாநாயகர் JCD பிரபாகர் வரவேற்பு
01:59
Video thumbnail
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2026.. காவலர்களின் மரியாதையை ஏற்றுக் கொண்ட சபாநாயகர் JCD பிரபாகர்
00:32
Video thumbnail
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2026.. முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்திற்கு வருகை!
00:51
Video thumbnail
தூத்துக்குடியில் கப்பல் கட்டுமான திட்டம்: ரூ.38,000 கோடி முதலீடு, 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு
00:20
Video thumbnail
தலைமைச் செயலகம் செல்லும் வழியில் திரண்டிருந்த மக்களை சந்தித்த முதலமைச்சர் விஜய்
00:36
Video thumbnail
தயவுசெய்து உங்கள் ஆட்சியை பற்றி வரக்கூடிய செய்திகளை படியுங்கள்..- விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
02:17
Video thumbnail
"என்னை மன்னித்துவிடுங்கள்!" - சர்ச்சை பேச்சுக்கு விளக்கம் கொடுத்த மாஸ்டர் மகேந்திரன்!
02:49
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img