தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் வேட்பு மனுவைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவுப் பெற்றுள்ளது.
சி.பி.ஐ போலீஸ் என கூறி தொழிலதிபரிடம் 50 லட்சம் மோசடி
தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் வாபஸ் பெறுவதற்கான கால அவகாசம் இன்று (மார்ச் 30) பிற்பகல் 03.00 மணியுடன் நிறைவுப் பெற்றது. இதையடுத்து, இன்று மாலை 05.00 மணியளவில் இறுதி வேட்பாளர் பட்டியல் மாலை வெளியாகிறது. சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணிகள் உள்ளிட்டவை முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
அதைத் தொடர்ந்து, வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளரின் சின்னம், பெயர், புகைப்படங்கள் ஆகியவற்றை பொருத்தும் பணிகள் நடைபெறும். தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர் மக்களவைத் தொகுதியில் 56 பேர் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். குறைந்தபட்சமாக நாகை மக்களவைத் தொகுதியில் 13 பேர் வேட்பு மனுவைத்தாக்கல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி எது தெரியுமா?
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19- ஆம் தேதி அன்று மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.