ம.தி.மு.க.வுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு திருச்சி மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் பத்திரங்கள்- அனைத்து தகவல்களையும் வெளியிட எஸ்பிஐ- க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து, ம.தி.மு.க.வுக்கு திருச்சி மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தொகுதி உடன்பாடு ஒப்பந்தத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் கையெழுத்திட்டனர்.

தி.மு.க. கூட்டணியில் கடந்த முறை ஈரோடு தொகுதியில் ம.தி.மு.க. போட்டியிட்ட நிலையில், தற்போது திருச்சி மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

திருச்சி மக்களவைத் தொகுதியில் ம.தி.மு.க. சார்பில் வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img