நாடாளுமன்ற தேர்தலையொட்டி கடநத 4 வாரங்களாக நடைபெற்று வந்த தேர்தல் பிரசாரமானது இன்று மாலை 6 ,மணியுடன் ஓய்வடைந்தது.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரையில், திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் திமுக சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமியும், பாஜக சார்பில் பிரதமர் மோடி 9 முறை தமிழகம் வந்து பாஜகவிற்காக பிரச்சாரம் செய்தார்., நாம் தமிழர் கட்சியின் சார்பில் சீமானும் கழக வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில் தமிழ்நாடு-புதுச்சேரி உள்ள 40 தொகுதிகளுக்கும் நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் தி.மு.க, காங்கிரஸ், ம.தி.மு.க, விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை போட்டியிடுகின்றன. அதிமுக கூட்டணி சார்பில் அ.தி.மு.க, தே.மு.தி.க, எஸ்.டி.பி.ஐ, புதிய தமிழகம் ஆகியவை போட்டியிடுகின்றன. பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சார்பில் பா.ஜனதா, அ.ம.மு.க, தமிழ் மாநில காங்கிரஸ், ஓபிஎஸ் தலைமையிலான அ.தி.மு.க தொண்டர் உரிமை மீட்புக்குழு, புதிய நீதிக்கட்சி, ஜ.ஜே.கே, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் களம் காண்கின்றன. நாம் தமிழர் கட்சியினர் மட்டும் 40 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுகிறது. இந்த நிலையில் கடந்த 4 வாரங்களாக நடைபெற்று வந்த அனல் பறக்கும் தேர்தல் பிரசாரமானது தற்போது ஓய்வடைந்தது.