மக்களவை தேர்தல் – டாஸ்மாக் கடைகளில் கண்காணிப்பு தீவிரம்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

மக்களவை தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய பாஜக அரசின் பதவிக்காலம் வருகிற மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதனை தொடர்ந்து புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்துகிறது. இதற்காக கடந்த 16ம் தேதி தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்தது. அதன்படி மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. அனைத்து கட்ட தேர்தலும் முடிவடைந்த பின்னர் ஜூன் 04ம் தேதி வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்படுகிறது. தமிழகத்தில் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் மக்களவை தேர்தலில் வேட்பு மனுவைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளது.

இந்த நிலையில், மக்களவை தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் வழக்கத்தைவிட 30%க்கு மேல் மதுபானங்கள் விற்பனையாகும் கடைகளில், தேர்தல் அதிகாரிகள் உத்தரவின் பேரில் டாஸ்மாக் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.

- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img