spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

பா.ம.க.வின் தேர்தல் அறிக்கை வெளியீடு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

பெண்கள் 21 வயதிற்கு முன்பு திருமணம் செய்வதற்கு பெற்றோர் சம்மதம் அவசியம் என்ற சட்டம் கொண்டு வரப்படும் என்று பா.ம.க.வின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ம.தி.மு.க.வுக்கு அதிர்ச்சிக் கொடுத்த உயர்நீதிமன்றம்!

பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.க.வின் தேர்தல் அறிக்கையை கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சென்னையில் வெளியிட்டனர்.

இதில் நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை உறுதிச் செய்து, அனைத்து சாதியினருக்கும் மக்கள்த்தொகைக்கு இணையாக இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசுகளுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்குவது, வரி வருவாயில் தமிழ்நாட்டிற்கான பங்கை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்டவைத் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

புதிய சாதனை படைத்த விராட் கோலி!

பெண்கள் 21 வயதுக்கு முன்பு திருமணம் செய்வதற்கு பெற்றோர் சம்மதம் தேவை எனக் கூறியுள்ள பா.ம.க., இது தொடர்பாக சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை உயர்நீதிமன்றத்தில் அலுவல் மொழியாக தமிழை அறிவித்தல், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற நடவடிக்கை, கல்விக்கடன் ரத்து, அனைவருக்கும் இலவச மருத்துவம் உள்ளிட்டவையும் தேர்தல் அறிக்கையில் முக்கிய அம்சங்களாக இடம் பெற்றுள்ளன.

தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் பா.ம.க. குறிப்பிட்டுள்ளது. மேலும், இந்தியாவில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 3,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img