திமுகவின் பொய்களும் பித்தலாட்டங்களும் இனிமேல் எடுபடாது என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார்.
வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பள்ளிக்கொண்டா பகுதியில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, கழக வெற்றி வேட்பாளர் டாக்டர். S. பசுபதி அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தேன். வேலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களின் ஜீவ நதியாக இருக்கின்ற பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் ஆந்திர அரசின் முயற்சிகளை எதிர்க்கத் திராணியற்ற அரசு இந்த விடியா திமுக அரசு! வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் அரசு திட்டங்களால் பயன்பெறும் பெண்களை தன் சொந்த பணத்தைக் கொடுப்பது போல ஏளனமாக கேலிக்கிண்டல் செய்யும் வகையில் பேசியுள்ளார். இதுதான் திமுகவின் குணம். இந்த குணத்தை மாற்றவே முடியாது.
அனைத்து மகளிருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் என்று நீங்கள் அளித்த வாக்குறுதியை நம்பி வாக்களித்த தாய்மார் ஒருவர், தற்போது தன்னை நிராகரித்தது ஏன் என்று திரு. @mkstalin அவர்களை நோக்கி எழுப்பிய கேள்வி, சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது. திரு. @mkstalin அவர்களே- மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்! இனி உங்கள் பொய்களும் பித்தலாட்டங்களும் எடுபடாது! மக்கள் விழித்துக்கொண்டார்கள்! இனி பிழைத்துக்கொள்வார்கள்!. எனக் கூறியுள்ளார்.