spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

அரசு பேருந்துகளை முறையாக பராமரிக்க வேண்டும் – ஈபிஎஸ் வலியுறுத்தல்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

அரசு பேருந்துகளை முறையாக பராமரித்து பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று திருச்சி நகரப் பேருந்து சென்று கொண்டிருக்கையில் ஒரு வளைவில் நடத்துனர் இருக்கையுடன் தூக்கி வெளியே விழுந்த சம்பவம் தமிழக மக்களிடம், குறிப்பாக அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஒரு சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் கீழே விழுந்து விபத்துக்குள்ளான நிகழ்வின்போதே இனியாவது அரசு பேருந்துகளை உரிய முறையில் பராமரிப்பு செய்து, அரசு பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த நான் இந்த விடியா திமுக அரசை வலியுறுத்தியிருந்தேன்.

 

ஆனால் மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடம் அரசு பேருந்து பற்றிய நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளன. எனவே, இனியாவது இந்த விடியா திமுக அரசு விழித்துக் கொண்டு, அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை முன்பிருந்தது போல் குறைத்து புதிய பேருந்துகள் வாங்கவும், இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்துகளை முறையாக பராமரிப்பு செய்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யுமாறு வலியுறுத்துகிறேன். எனக் குறிப்பிட்டுள்ளார்.

Video thumbnail
பெட்ரோல் தட்டுப்பாடு என பரவி வரும் வதந்தியால் பெட்ரோல் நிலையங்களில் குவிந்து வரும் வாகன ஓட்டிகள்
00:47
Video thumbnail
கும்பமேளாவில் பிரபலமான மோனலிசா கேரளாவில் கோயிலில் தனது காதலன் பர்கான் கானை திருமணம் செய்தார்
00:29
Video thumbnail
வழிநெடுக கூட்டணி கட்சிகளின் கொடிகள், NDA பொதுக்கூட்டத்திற்கு பிரதமருக்கு பிரம்மாண்ட வரவேற்பு
01:11
Video thumbnail
ஆர்.என்.ரவிக்கு விமான நிலையத்தில் அவருக்கு தமிழ்நாடு காவல்துறையின் சார்பாக காவல் துறை மரியாதை
01:00
Video thumbnail
நொய்டாவில் நீண்ட வரிசையில் காத்திருந்து சிலிண்டர்களை வாங்கி செல்லும் மக்கள்
01:19
Video thumbnail
துபாயில் சிக்கிய நடிகர் அஜித்குமார் சென்னை திரும்பினார்
00:57
Video thumbnail
NDAல் தவெக? விஜயிடம், பவன் கல்யாண் பேச்சுவார்த்தை
01:13
Video thumbnail
அதிமுக - பாஜக கூட்டணியில் இணையும் தவெக?
01:18
Video thumbnail
நடிகை திரிஷாவுக்கு வாழ்த்துகள் என கூறி திடீரென வீடியோ வெளியிட்ட நடிகர் பார்த்திபன்
00:45
Video thumbnail
திருச்சி: திமுக மாநில மாநாட்டுத் திடலின் ட்ரோன் காட்சி
01:31
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img