சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.54,960-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியில் உள்ளனர். சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள் தோறும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக தங்கம் விலை கடந்த சில தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சனிக்கிழமை சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.54,240-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.54,320க்கும் விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ.6,790-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரித்து ரூ.54 ஆயிரத்து 960-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.6 ஆயிரத்து 870 ஆக உள்ளது. வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.90.50-க்கும், கிலோவுக்கு ரூ.1000 அதிகரித்து ரூ.90,500-ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை 55 ஆயிரத்தை நெருங்கி வருவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.