“முருகனின் மனைவிக்கு அங்கன்வாடி பணியை வழங்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!”

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

உயிரிழந்த முருகனின் மனைவிக்கு உடனடியாக அங்கன்வாடி பணியாளர் பணியை வழங்க உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சசிகலா புஷ்பா சர்ச்சை வீடியோ…..பா.ஜ.க. வேட்பாளர் விளக்கம்!

தென்காசியைச் சேர்ந்த ஓட்டுநர் முருகன் காவலர் தாக்கி உயிரிழந்ததாக அவரது மனைவி மீனா உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “ஓட்டுநர் முருகன் வழக்கில் காவலர்கள் கடுமையாக நடந்துக் கொண்டுள்ளனர். காவல்துறையினர் தாக்கி உயிரிழந்த ஓட்டுநர் முருகனின் மனைவிக்கு உடனடியாக அங்கன்வாடி பணியாளர் பணியை வழங்க வேண்டும். வி.ஏ.ஓ. உதவியாளர் பணி காலியாகும் போது அப்பணியை முருகன் மனைவிக்கு வழங்க வேண்டும். முருகனின் மனைவிக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 8 வாரத்திற்குள் நெல்லை மாவட்ட ஆட்சியர் நிவாரணம் வழங்க வேண்டும்” என்று அதிரடியாக உத்தரவிட்டனர்.

வெள்ளியங்கிரி மலை ஏறிய 5 பேர் உயிரிழப்பு!

அத்துடன், இந்த வழக்கு தொடர்பான விசாரணையை நெல்லை மாவட்ட சி.பி.சி.ஐ.டி., டி.எஸ்.பி மேற்கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img