ஆராய்ச்சியில் இஸ்ரோவுடன் இணையும் – ஐஐடி மெட்ராஸ் !

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ஐஐடி மெட்ராஸ் இஸ்ரோவுடன் இணைந்து விண்கலம் மற்றும் ஏவுவாகன வெப்ப மேலாண்மை (Spacecraft & Launch vehicle Thermal Management) தொடர்பான ஆராய்ச்சி மையத்தைத் தொடங்கவிருக்கிறது.

ஆராய்ச்சியில்  இஸ்ரோவுடன் இணையும் - ஐஐடி மெட்ராஸ் !

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் (இஸ்ரோ) இணைந்து ‘திரவ- வெப்ப அறிவியல்’ ஆராய்ச்சிக்கான உயர் சிறப்பு மையத்தைத் தொடங்கவிருக்கிறது. இந்த மையத்தை அமைப்பதற்கான தொடக்க நிதியாக ரூ.1.84 கோடியை இஸ்ரோ நிறுவனம் வழங்கும்.

இஸ்ரோவின் விண்கலம் மற்றும் ஏவுவாகனம் தொடர்பான வெப்ப மேலாண்மை ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கான ஒருங்கிணைப்பு மையமாக இந்த மையம் செயல்படும். ஐஐடி மெட்ராஸ் ஆசிரியர்களின் நிபுணத்துவத்தை மேம்படுத்துவதன் மூலம், பல்வேறு கூறுகளின் வடிவமைப்பு, பகுப்பாய்வு, சோதனை தொடர்பாக ஏற்படும் வெப்பச் சிக்கல்களுக்கு தீர்வுகாண முடியும்.

இந்த ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஐஐடி மெட்ராஸ் (தொழில்துறை ஆலோசனை மற்றும் நிதியுதவி ஆராய்ச்சி) டீன் பேராசிரியர் மனு சந்தானம், இஸ்ரோவின் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்பு இயக்குநரகத்தின் இயக்குநர் திரு. டி.விக்டர் ஜோசப் ஆகியோர் இன்று கையெழுத்திட்டனர்.  ஐஐடி மெட்ராஸ் இயந்திரப் பொறியியல் துறையின் திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அரவிந்த் பட்டமட்டா, ஐஐடி மெட்ராஸ், இஸ்ரோ ஆகியவற்றில் இத்துறை சம்பந்தப்பட்டவர்கள் பலரும் இந்நிகழ்வின்போது உடனிருந்தனர்.

ஆராய்ச்சியில்  இஸ்ரோவுடன் இணையும் - ஐஐடி மெட்ராஸ் !

இந்த ஒத்துழைப்பின் முக்கிய அம்சங்கள், வெப்ப மேலாண்மை ஆராய்ச்சி மையம்: விண்கலம் மற்றும் ஏவுவாகனத்திற்கான வெப்ப மேலாண்மையில் உள்ள சவால்கள் குறித்து ஆய்வு செய்வதுடன், இஸ்ரோவுக்கான முக்கிய ஆராய்ச்சித் தளமாக இந்த மையம் செயல்படும் நிதி ஒதுக்கீடு: ஆராய்ச்சி மையத்தை அமைப்பதற்கான அத்தியாவசிய உள்கட்டமைப்பு, உபகரணங்கள் போன்றவற்றுக்கு ரூ.1.84 கோடி தொடக்க நிதியையும், நுகர்பொருட்கள், பராமரிப்பு மற்றும் திரவ-வெப்ப அறிவியலின் எதிர்காலத் திட்டங்களுக்கான கூடுதல் தொகையையும் இஸ்ரோ வழங்கும். மேம்பட்ட ஆராய்ச்சித் திட்டங்கள்: விண்கலத்தின் வெப்ப மேலாண்மை, ஹைபிரிட் ராக்கெட்டுகளில் உறுதியற்ற எரிப்புத்தன்மை, கிரையோ டேங்க் வெப்ப இயக்கவியல் உள்ளிட்டவை இந்த ஆராய்ச்சித் திட்டத்தின் முக்கிய பகுதிகளாகும்.

தொழில்துறை-கல்வித்துறை ஒத்துழைப்பு: இஸ்ரோ விஞ்ஞானிகள், ஐஐடி மெட்ராஸ் ஆசிரியர்களுக்க இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதுடன், திரவ- வெப்ப அறிவியலில் புதிய கண்டுபிடிப்புகளையும் இந்த மையம் உருவாக்கும்.‘திரவ- வெப்ப அறிவியலில்’ ஆராய்ச்சிக்காக ஐஐடி மெட்ராஸ் நிறுவத் திட்டமிட்டுள்ள உயர் சிறப்பு மையம், இஸ்ரோவின் விண்கலம் மற்றும் ஏவுவாகனம் தொடர்பான வெப்ப மேலாண்மை ஆராய்ச்சி நடவடிக்கைகளு ஒருங்கிணைப்பு மையமாகவும் செயல்படும். ஆசிரியர்களின் நிபுணத்துவத்தை மேம்படுத்துவதன் மூலம், பல்வேறு கூறுகளின் வடிவமைப்பு, பகுப்பாய்வு, சோதனை தொடர்பாக ஏற்படும் வெப்பச் சிக்கல்களுக்கு தீர்வுகாண முடியும்.

ஆராய்ச்சியில்  இஸ்ரோவுடன் இணையும் - ஐஐடி மெட்ராஸ் !

இந்த முன்மொழிவை மதிப்பீடு செய்த இஸ்ரோ நிறுவனம், விண்கல வெப்ப மேலாண்மை, ஹைபிரிட் ராக்கெட்டுகளில் எரிப்பு உறுதியற்ற தன்மை, கிரையோ-டேங்க் தெர்மோடைனமிக்ஸ் ஆய்வுகள் போன்றவற்றில் இஸ்ரோவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுக்கான செயல்பாடுகளுக்கு புதிதாக உருவாக்கப்படும் மையம் உதவிகரமாக இருக்கும் என கண்டறிந்தது. மேலும், விண்வெளித் துறை, இஸ்ரோ ஆகியவை திரவ மற்றும் வெப்ப அறிவியல் தொடர்பான ஆராய்ச்சி நடவடிக்கைகளை விரிவுபடுத்தும்போது இந்த மையத்தை பயன்படுத்திக் கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஐஐடி மெட்ராஸ் இயந்திரப் பொறியியல் துறையின் பேராசிரியர் அரவிந்த் பட்டமட்டா மேலும் கூறுகையில், “இந்த மையம் தனித்துவமான தொழில்-கல்வி பயன்பாட்டை மேம்படுத்தும். இஸ்ரோ விஞ்ஞானிகள், ஐஐடி மெட்ராஸ் ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து முக்கிய பகுதிகளில் ஆராய்ச்சியை முன்னெடுக்க இந்த முயற்சி வகைசெய்கிறது. வெப்ப அறிவியலின் சிக்கலான சவால்களை எதிர்கொள்வதன் மூலம் நாட்டின் விண்வெளித் திட்டத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கவும், விண்வெளித் தொழில்நுட்பங்களில் இந்தியாவின் தன்னம்பிக்கையை வலுப்படுத்தவும் இலக்கு நிர்ணயித்துள்ளோம்” என்றார்.

யுனஸ்கோ கூறியுள்ளதை தகர்த்தெறிந்து முன்னேற வேண்டும்  – அமைச்சர் சா.மு.நாசர்

நாட்டின் உண்மையான தன்னம்பிக்கை, தன்முயற்சி விண்வெளித் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமெனில் மேம்பட்ட கல்வி ஆராய்ச்சி மூலம் அடிப்படை அறிவை உருவாக்க வேண்டும் என்ற உயரிய நோக்குடன் இஸ்ரோ, ஐஐடி மெட்ராஸ் ஆகியவை இணைந்து 1985-ம் ஆண்டில் ‘இஸ்ரோ-ஐஐடிஎம் ஸ்பேஸ் டெக்னாலஜி செல்’ என்ற பிரிவைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
SIR திருத்தம் இந்த மண்ணின் பூர்வ குடி மக்களின் குடியுரிமைகளை பறிக்கும் முயற்சி | வேல்முருகன் பேட்டி
06:46
Video thumbnail
இரண்டாவது இடதுக்கு தான், அதிமுக - தவெக இடையே போட்டி
01:14
Video thumbnail
இந்தியாவிற்கே வழிகாட்டியாக திகழும் கட்சி திமுக
01:14
Video thumbnail
விஜயுடன் இணையும் அண்ணாமலை, TTV, OPS, செங்கோட்டையன்
01:07
Video thumbnail
2026 தமிழ்நாடு தேர்தல் மிக மிக முக்கியமானது | விஜயுடன் இணையும் அண்ணாமலை, TTV, OPS, செங்கோட்டையன்
16:39
Video thumbnail
எடப்பாடியாரைப் போன்று விஜய்யும் பாஜக வலையில் சிக்கிக்கொண்டார்
01:12
Video thumbnail
விஜய்க்கு, பாஜக ஆதரவு
01:10
Video thumbnail
பீகார் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக ஆதாரம் இருந்தால் பாஜக வழக்கு தொடரலாம் – ஆர். எஸ். பாரதி
14:27
Video thumbnail
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் விஜய் சந்திப்பு.. விஜய் எப்போது அறிவித்தார்..
02:19
Video thumbnail
பாதிக்கப்பட்ட குடும்பத்தார் விஜய்க்கு ஆதரவா?
02:00
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img