புழல் சிறையில் விசாரணைக் கைதிகள் இண்டர்காம் மூலம் வழக்கறிஞர்களுடன் பேசும் நடைமுறை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம்.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

புழல் சிறையில் விசாரணைக் கைதிகள் இண்டர்காம் மூலம் வழக்கறிஞர்களுடன் பேசும் நடைமுறை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம். சென்னை உயர் நீதிமன்றத்தில் இண்டர்காம் மூலம் புழல் சிறையில் விசாரணைக் கைதிகள் வழக்கறிஞர்களுடன் பேசும் நடைமுறை திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சிறைக் கைதிகளை சந்திக்க வழக்கறிஞர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் வி.சிவஞானம் ஆகியோா் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சிறையில் உள்ள கைதிகளுடன் இண்டர்காமில் மட்டுமே பேச வேண்டும் எனக் கூறுவதன் மூலம், அந்த உரையாடல்கள் பதிவு செய்யப்படுகிறதோ என்ற அச்சம் கைதிகள் மத்தியில் உள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞரான இ.ராஜ்திலக் அரசு தரப்பில் ஆஜரானர் , இண்டர்காம் உரையாடல்கள் எதுவும் பதிவு செய்யப்படுவதில்லை எனவும், தற்போது கைதிகள் இண்டர்காம் மூலம் வழக்கறிஞர்களுடன் பேசும் நடைமுறை திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், மீண்டும் பழைய நடைமுறையே கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

வழக்கறிஞர் எஸ்.காசிராஜன் மனுதாரர் சார்பில் ஆஜரானார் , ஒரு நேரத்தில் ஒரே ஒரு கைதியை மட்டுமே அனுமதிப்பதாகவும், அதனை அதிகரிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார் .

இதற்கு பதிலளித்த கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் , ஒரே நேரத்தில் ஐந்து கைதிகளை சந்திக்க அனுமதி அளிக்கப்படும் எனக் கூறினார். மேலும், கைதிகளை சந்திக்க வரும் பெண் வழக்கறிஞர்களுக்கு கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதனையடுத்து, தற்போதைய செய்யப்பட்டுள்ள கழிப்பிட வசதியை முறையாக பராமரிக்க வேண்டுமென தெரிவித்த நீதிபதிகள், வட மாநிலங்களை விட தமிழகத்தில் சிறை வசதிகள் சிறப்பாக உள்ளதாக கூறினர்.
மேலும், சிறை அதிகாரிகளை மரியாதையுடன் நடத்த வேண்டுமென வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணையை அக்டோபர் 15ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

 

Video thumbnail
யார் இந்த ஆடிட்டர் குருமூர்த்தி? Auditor #gurumurthy
00:51
Video thumbnail
பாமகவில் நடப்பது அப்பா மகன் மோதலா? (அ) ஆரிய திராவிட மோதலா? ஆடிட்டர் குருமூர்த்தியின் அடுத்த திட்டம்
13:13
Video thumbnail
ராமதாஸூடன் ஆடிட்டர் குருமூர்த்தி திடீர் சந்திப்பு | பாஜக கூட்டணியில் பாமக | Auditor Gurumurthy | PMK
09:16
Video thumbnail
பாஜக சொல்வதை எடப்பாடி செய்தே ஆகவேண்டும்
00:59
Video thumbnail
மாநிலங்களின் கட்சிகளை அழிப்பதே பாஜகவின் நோக்கம்
01:00
Video thumbnail
அன்புமணி பாமகவை பாஜகவில் இணைக்க முயற்சி
01:02
Video thumbnail
ராமதாஸ் - அன்புமணி மோதலால் பாமகவில் குழப்பம் | அன்புமணி பாமகவை பாஜகவில் இணைக்க முயற்சி | PMK | BJP
13:04
Video thumbnail
திமுக ராஜ்யசபா வேட்பாளர்கள் அறிவிப்பு
00:45
Video thumbnail
2026-ல் ஸ்டாலின் தான் முதலமைச்சர் - இந்தியா டுடே
00:50
Video thumbnail
திமுக ராஜ்யசபா வேட்பாளர்கள் அறிவிப்பு | 2026-ல் ஸ்டாலின் தான் முதலமைச்சர் - இந்தியா டுடே
11:33
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img