ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் இருப்பதாகக் கூறி ரசிகர்களிடம் ரூபாய் 25,000 மோசடி செய்த நபரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
வேட்பு மனுத்தாக்கல் நிறைவு: 834 பேர் வேட்பு மனுத்தாக்கல்!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி- குஜராத் டைட்டன்ஸ் அணி மோதும் போட்டி நேற்று (மார்ச் 26) நடைபெற்றது. போட்டியினை காண ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் மைதானம் அருகே சுற்றித் திரிந்தனர். அவர்களில் பலருக்கு டிக்கெட் கிடைக்காததை அறிந்துக் கொண்ட சிலர் கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டனர்.
இதேபோல் கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை செய்வதாகக் கூறி, போரூரைச் சேர்ந்த மென்பொறியாளர் உள்ளிட்ட இருவரிடம் அடையாளம் தெரியாத நபர் மோசடியில் ஈடுபட்டுள்ளார். மைதானத்தில் காவலாளியை போல் ஆடை அணிந்திருந்த நபர் ரூபாய் 25,000 பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
பானைச் சின்னம் கேட்டு வி.சி.க. வழக்கு!
இதனிடையே, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டை கள்ளச்சந்தையில் விற்பனை செய்தது தொடர்பாக, 18 வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டு 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.