spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

6ம் வகுப்பு மாணவர்களிடம் சீட்டுக்கட்டு முறையை அறிமுகப்படுத்துவது ஏற்புடையது அல்ல – ஜவாஹிருல்லா!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

6ம் வகுப்பு மாணவர்களிடம் சீட்டுக்கட்டு முறையை அறிமுகப்படுத்துவது ஏற்புடையது அல்ல என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஆறாம் வகுப்பு கணக்கு பாடத்தில் மூன்றாம் பருவத்தின் தொகுதி இரண்டாவது புத்தகத்தில் இயல் இரண்டில் முழுக்கள் எனும் தலைப்பில் ஆன பாடம் இடம்பெற்றுள்ளது. கணிதத்தில் முழுக்கள் குறித்து உவமையுடன் நடத்த பல்வேறு வழிமுறைகள் இருந்தும் சீட்டுக்கட்டு முறையை மாணவர்களிடையே அறிமுகப்படுத்துவது ஏற்புடையது அல்ல. தற்போது ஆன்லைன் ரம்மி மற்றும் இதர சூதாட்டங்களில் சீட்டு கட்டு முறையே முதலிடம் வகிக்கிறது. தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியை அரசே தடை செய்திருந்தது. இத்தகைய சூழலில் மாணவர் பருவத்திலேயே சீட்டு கட்டு விளையாட்டு குறித்தும் அதன் விளையாட்டு உத்தி குறித்தும் விரிவாக பாடத்திட்டத்தில் இடம்பெறச் செய்திருப்பது ஏற்புடையது அல்ல.

பத்தாம் வகுப்பு கணக்கு பாடத்திலும் இது போன்ற பாடங்கள் இருந்தன. அதனை கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை நீக்கி கேள்வித்தாள்களிலும் அந்த பாடங்கள் இடம்பெறாத வகையில் பார்த்துக் கொண்டது. இப்பாடத்திட்டம் அதிமுக அரசு காலத்தில் வடிவமைக்கப்பட்டது என்றாலும் கூட திராவிட மாடல் ஆட்சியில் இதே பாடம் நீடிப்பது கொள்கைக்கு முரணானது. எனவே பள்ளிக்கல்வித்துறை மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு உடனடியாக அந்த பாடத்தை ஆறாம் வகுப்பு பாட புத்தகத்தில் இருந்து நீக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். எனக் குறிப்பிட்டுள்ளார்.

Video thumbnail
ராஜஸ்தான் மாநிலம் சுருவில் திடீரென வீசிய புழுதிப் புயலால் புகை மண்டலமாக காட்சியளித்த நகரம்
01:08
Video thumbnail
இணையத்தில் வைரலாகி வரும் நடிகர் சூர்யாவின் Workout வீடியோ
00:37
Video thumbnail
கீர்த்தி சக்ரா வீரருக்கு ரூ.48 லட்சம் காசோலை வழங்கிய முதல்வர் விஜய்..
00:39
Video thumbnail
கரண்ட் பிரச்சனை.. ஒரே மாதத்தில் மக்கள் இவ்வளவு போராட்டங்கள் நடத்தியதை நான் பார்த்ததில்லை..
01:51
Video thumbnail
பெண்களை சக மனிதர்களாக கூட மதிக்காத ஆண்கள் இருக்கும் சமூகம் இது.. - மதிவதனி பேச்சு
01:48
Video thumbnail
இப்போதும் தமிழ்நாட்டை ஆள்பவர் தளபதி மு.க.ஸ்டாலின் தான்.. - முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு
01:48
Video thumbnail
அம்பத்தூரில் கலைஞர் பிறந்தநாள் விழா கூட்டத்தில் திடீர் மின் தடை
01:11
Video thumbnail
சபரிமலை ஐயப்பனை தரிசிக்க இருமுடி கட்டி வந்த அன்புமணி, சௌமியா அன்புமணி..!
00:35
Video thumbnail
நீதிமன்ற வளாகத்தில் விவாகரத்து மனுவை கிழித்தெறிந்து, கணவருடன் சேர்த்த மனைவி
00:58
Video thumbnail
"தவெகவிற்கு ஆதரவளித்த கட்சிகள் மீது முதலமைச்சர் விஜய்-க்கு நம்பிக்கை இல்லையா?"
01:46
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img