மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பாக ஏரிகள் ,வாய்க்கால்களை தூர்வார வேண்டும் – ஜவாஹிருல்லா!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பாக ஏரிகள் ,வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என தமிழக அரசுக்கு மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னகத்தின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்துவரும் காவிரி பாசனப் பகுதியின் வேளாண்மைக்கு உயிர் நாடியாக மேட்டூர் அணை திகழ்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் நாள் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படுவது வழமையான நடைமுறையாக உள்ளது. காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள், ஏரிகள்,வாய்க்கால்கள்,கிளை வாய்க்கால்கள்ஆகியவற்றில் உரியத் திட்டமிடலுடன் தூர்வாரும் பணிகளை உடனடியாக தமிழ்நாடு அரசு செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். பலமிழந்துள்ள தரைப்பகுதிகளைக் கண்டறிந்து அங்குப் பலப்படுத்தும் பணிகளையும், மதகுகள் மற்றும் ரெகுலேட்டர்கள் ஆகியவற்றின் தரத்தைப் பரிசோதனை செய்து தேவைப்படும் இடங்களில் உரிய மராமத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

ஆற்றங்கரை மற்றும் வாய்க்கால் கரைகளில் பொதுமக்கள் குளிப்பதற்கும், முக்கிய விசேச நாள்களில் சடங்குகளில் ஈடுபடுவோருக்கு ஏதுவாக தேவைப்படும் இடங்களில் பாதுகாப்புடன் கூடிய படித்துறைகளையும் அமைத்திடத் தமிழக அரசு உரிய ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும். மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பாக இப்பணிகளை விவசாயிகளின் நலனில் பெரிதும் அக்கறை கொண்ட தமிழ்நாடு அரசு விரைந்து செய்திட வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். எனக் குறிப்பிட்டுள்ளார்.

Video thumbnail
விஜய்க்கு, பாஜக ஆதரவு
01:10
Video thumbnail
பீகார் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக ஆதாரம் இருந்தால் பாஜக வழக்கு தொடரலாம் – ஆர். எஸ். பாரதி
14:27
Video thumbnail
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் விஜய் சந்திப்பு.. விஜய் எப்போது அறிவித்தார்..
02:19
Video thumbnail
பாதிக்கப்பட்ட குடும்பத்தார் விஜய்க்கு ஆதரவா?
02:00
Video thumbnail
பாதிக்கப்பட்ட கரூர் மக்கள் சந்திப்பு.. விஜய் நடத்திய நாடகம்..
01:55
Video thumbnail
ஆபத்தான அரசியல்வாதி, CBI சாட்சியை கலைக்கும் விஜய்
01:06
Video thumbnail
ஆபத்தான அரசியல்வாதி விஜய் | CBI சாட்சியை கலைக்கும் விஜய் | க்ரைம் ரேட் கூடிக்கொண்டே போகிறது | TVK
20:20
Video thumbnail
பெரியாரையும், திராவிட சிந்தனையாளர்களையும் தூக்கிப் பிடித்து தொடங்கப்பட்ட கட்சி நாம் தமிழர் கட்சி
01:09
Video thumbnail
அதிமுக கட்சி உடைவதற்கு பாஜக தான் காரணம்
01:12
Video thumbnail
பிஜேபி, ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் அதிமுக, தவெக, நாதக, பாமக
01:18
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img