இ – பாஸ் உத்தரவால் உள்ளூர் மக்கள் பொருளாதார இழப்புகளைச் சந்திப்பார்கள் – ஜவாஹிருல்லா!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

இ – பாஸ் உத்தரவால் உள்ளூர் மக்கள் பொருளாதார இழப்புகளைச் சந்திப்பார்கள் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், வருடத்தில், ஓரிரு மாதங்கள் மட்டுமே, சுற்றுலாப் பயணிகள் குவியும் இடங்களான உதகை மற்றும் கொடைக்கானல் , அம்மலைவாழ் மக்களின் பெரும் பொருளாதார நம்பிக்கையாக உள்ளது. ஆனால், உயர்நீதிமன்றம் அங்குச் செல்லும் வாகனங்கள் ஈ பாஸ் பெற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள திட்டம் இப்பொழுது செயல்படுத்தப்பட்டால், உதகை மற்றும் கொடைக்கானலில் சுற்றுலாவை நம்பி வாழக்கூடிய மக்கள் மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளவர்கள். இதனால் உள்ளூர் மக்கள் பொருளாதார இழப்புகளைச் சந்திப்பார்கள். அது அவர்களுக்குப் பேரிழப்பாக அமையும்.

மேலும் இ-பாஸ் திட்டத்தின் மூலமாக உள்ளூர் வாகனங்களுக்கு நெருக்கடிகள் உருவாகும். இதனால் உள்ளூர் வாகன ஓட்டிகள் மிகவும் மன உளைச்சலுக்கு ஏற்படும் சூழல் உள்ளது. ஆகவே இது குறித்து தமிழக அரசு உடனடியாக மறுபரிசீலனை மனுத் தாக்கல் செய்து இந்த புதிய கட்டுப்பாட்டினை ரத்து செய்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இரு மலைத் தலங்களுக்கும் செல்லும் வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்தக் கூடுதல் காவலர்களை காவல்துறை பணியில் அமர்த்தி இப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

Video thumbnail
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநில மாநாடு
00:50
Video thumbnail
இந்தியாவின் மிகப்பெரிய எதிரெதிரான அரசியல்
00:58
Video thumbnail
சுயமரியாதை என்றால் என்ன?
00:53
Video thumbnail
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா | சுயமரியாதை என்றால் என்ன? | Kovai | Mugavari News
13:00
Video thumbnail
சிந்து நதி ஒப்பந்தம் ரத்து என்பது போரைவிட மிக ஆபத்தானது
00:48
Video thumbnail
சிந்து நதி நீர் ஒப்பந்தம் எப்போது நிறைவேற்றப்பட்டது
00:45
Video thumbnail
தண்ணீர் யுத்தம் | பாகிஸ்தான் பாலைவனமாக மாறிவிடும்
00:32
Video thumbnail
துணைவேந்தர்கள் மாநாடு மொத்தமா FLOP | புறக்கணிக்கும் பல்கலை. துணைவேந்தர்கள் | ஆளுநர் ரவி | RN Ravi
10:08
Video thumbnail
சிந்து நதி ஒப்பந்தம் ரத்து என்பது போரைவிட மிக ஆபத்தானது | இந்தியா அதிரடி நடவடிக்கை | Indus River
08:28
Video thumbnail
இட ஒதுக்கீடுகாக அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்றியவர் பெரியார்
00:52
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img