ஜீன் 6 பள்ளிகள் திறப்பு – மாணவர்கள் பழைய பஸ் பாஸை பயன்படுத்தி கொள்ளலாம்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ஜீன் 6 பள்ளிகள் திறப்பு - மாணவர்கள் பழைய பஸ் பாஸை பயன்படுத்தி கொள்ளலாம் 

கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 6ம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் பள்ளிகள் திறந்த உடனேயே புதிய பஸ் பாஸ் வழங்குவது சாத்தியமில்லாததால் அதே நேரத்தில் மாணவர் சேர்க்கை முடிந்த பின்பு ஒட்டுமொத்தமாக கணக்கெடுக்கப்பட்டு மாணவர்களுக்கு புதிய பஸ் பாஸ்கள் வழங்கப்படும்.

அதுவரை மாணவ மாணவிகள் தங்களுடைய பள்ளி அடையாள அட்டை மற்றும் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பஸ் பாஸை பேருந்துகளில் காண்பித்து பயணம் மேற்கொள்ளலாம் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

போக்குவரத்து கழக அதிகாரிகள் மாணவ, மாணவியருக்கு விரைந்து பஸ் பாஸ் வழங்க பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள் எனவும் மாணவ, மாணவியரின் விவரங்கள் முழுமையாக கிடைத்தவுடன் பஸ் பாஸ் வழங்கப்படும் எனவும்  போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img