நாடாளுமன்ற தேர்தலையொட்டி கள்ளக்குறிச்சியில் அதிமுக வேட்பாளரை குமரகுருவை ஆதரித்து அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரையில், திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் அதிமுக சார்பில் அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கழக வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
19.04.2024 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலையொட்டி, மாண்புமிகு கழகப் பொது செயலாளர் ‘புரட்சித் தமிழர்’ திரு.
@EPSTamilNadu அவர்கள், நேற்று, கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆத்தூர், ராணிப்பேட்டை எம்.ஜி.ஆர். திடலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், கள்ளக்குறிச்சி தொகுதி கழக வேட்பாளர் திரு. R. குமரகுரு, Ex. MLA., அவர்களுக்கு, ‘இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, அவரை மகத்தான வெற்றி பெறச் செய்திடுமாறு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.