தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் சேலத்தில் நேரில் சந்தித்துப் பேசினார்.
சாதனை படைத்த மஞ்சும்மல் பாய்ஸ் குழு- நடிகர் ரஜினி வாழ்த்து
சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து, பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று (மார்ச் 30) மாலை 07.00 மணிக்கு நடைபெறும் மாபெரும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் தி.மு.க.வின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், சிறப்புரையாற்றுகிறார்.
இதற்காக சேலம் வந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சேலம் கடைவீதியில் இன்று காலை 07.00 மணிக்கு நடந்து சென்று பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை நேரில் சந்தித்து வாக்குச் சேகரித்தார். இந்த சூழலில், சேலத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் நேரில் சந்தித்துப் பேசினார்.
பாரத ரத்னா விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
இந்த சந்திப்பின் போது, மக்களவைத் தேர்தல் பணிகள், வெற்றி வியூகம் உள்ளிட்டவைக் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.