நாடாளுமன்ற தேர்தலையொட்டி கரூரில் நடைபெற்ற அதிமுக பிரச்சார பொதுக்கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் தங்கவேல் ஆதரித்து அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரையில், திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. அதிமுக சார்பில் அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முழுவதும் சூறாவளி பிரசாரம் மற்றும் பிரச்சார பொதுக்கூட்டங்கள் மேற்கொண்டு வருகிறார்.
அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, கழக வெற்றி வேட்பாளர் திரு. K.R.L. தங்கவேல் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார். கரூர் தொகுதிக்கு தனி மாவட்ட அந்தஸ்து அளித்து, இந்த தொகுதியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த ஒரே கட்சி @AIADMKOfficial தானியத்தை காட்டினால் என்ன தானியம் என்று சொல்ல தெரியாத திரு. ஸ்டாலின் அவர்கள், பச்சைதுண்டு போட்டு பச்சைப்பொய் பேசுகிறேன் என்று சொல்கிறார். வேளாண்மை பற்றி திரு. ஸ்டாலினுக்கு என்ன தெரியும்?
விவசாயத்தைப் பற்றி மேடை போட்டு பேச நான் தயார்! யார் விவசாயி என்பதை நிரூபித்து காட்டுகிறேன். அன்று எதிர்க்கட்சியில் இருந்தபோது செந்தில் பாலாஜியை வசைபாடிய திரு. @mkstalin அவர்கள், இப்போது புகழாரம் சூட்டுகிறார். ஐந்து கட்சிகளுக்கு மாறி, ஒரே ஆண்டில் இரு வேறு கட்சிகளின் சின்னங்களில் நின்ற ஒருவர் திமுகவிற்கு செயல் மறவராம்! மதுபான பார்களை பினாமி பெயர்களில் எடுத்து, கள்ள மது விற்று, அதன்மூலம் வந்த பணத்தில் ஆயிரக்கணக்கான கோடிகளை கப்பம் கட்டிய செந்தில் பாலாஜி திரு.ஸ்டாலின் அவர்களுக்கு செயல் வீரராம்! எனக் குறிப்பிட்டுள்ளார்.