நாடாளுமன்ற தேர்தலையொட்டி கரூரில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரையில், திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. திமுக சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
திமுக இளைஞரணி தலைவர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கரூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் #INDIA கூட்டணி – காங்கிரஸ் பேரியக்கத்தின் வெற்றி வேட்பாளர் சகோதரி @jothims அவர்களுக்கு ஆதரவாக மணப்பாறையில் இன்று பரப்புரை மேற்கொண்டோம். ஊரக பொருளாதாரத்தை உருக்குலைத்த ஒன்றிய பாஜகவின் அட்டூழியங்களை முடிவுக்கு கொண்டு வர, பாசிஸ்ட்டுகளை ஒரு கை பார்க்க ஆதரிப்பீர் கை சின்னம் என்று வாக்கு சேகரித்தார்.