நாடாளுமன்ற தேர்தலையொட்டி கோவையில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
கோயம்புத்தூரில் நேற்று (03.04.2024) நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., அவர்கள் கலந்து கொண்டு இந்தியா கூட்டணி கட்சிகளில் இருக்கும் திராவிட முன்னேற்ற கழகத்தின் கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் திரு.கணபதி பி.ராஜ்குமார் அவர்களை ஆதரித்து பரப்புரை பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்கள். பரப்புரையின் போது அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் திரு.எஸ். மயூரா ஜெயக்குமார் அவர்கள், மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் டாக்டர்.டி.ஆர்.பி.ராஜா அவர்கள், கோயம்புத்துர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வழக்கறிஞர் கருப்புசாமி அவர்கள் தந்தை பெரியார் திராவிடர் கழகம் தலைவர் திரு கோவை இராமகிருட்டிணன் அவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியின் மூத்தத் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டார்கள்.