தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு 1,749 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதில் 664 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டனர்.
“இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை ஜெயலலிதா”- எடப்பாடி பழனிசாமி பேச்சு!
தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று முன்தினம் (மார்ச் 27) நிறைவடைந்த நிலையில், தமிழகம் முழுவதும் 1,749 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டனர். இவைகளில் 1,085 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 664 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
பாஜகவின் செல்வாக்கு சரிகிறது! அமலாக்கத்துறைக்கு நன்றி சொல்லும் இண்டியா கூட்டணி!
அதிகபட்சமாக கரூரில் 73 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 56 மனுக்கள் ஏற்கப்பட்டன; 17 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. பெரம்பலூர் தொகுதியில் 33 மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், 23 மனுக்கள் ஏற்கப்பட்டன. 39 தொகுதிகளிலேயே குறைவாக நாகை தொகுதியில் 9 மனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளனர். இதனிடையே, விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு 22 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 8 மனுக்கள் ஏற்க மறுக்கப்பட்ட நிலையில், 14 மனுக்கள் ஏற்கப்பட்டது.