“உண்மைக்கு அரிச்சந்திரன் என்றால் பொய்க்கு நரேந்திர மோடி – மனோ தங்கராஜ் தாக்கு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

“உண்மைக்கு அரிச்சந்திரன் என்றால் பொய்க்கு நரேந்திர மோடி என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், பொய் 1. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக்கின் தேர்தல் அறிக்கை போல் இருக்கிறது. பொய் 2. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் கழுத்தில் இருக்கும் தாலி கூட மிஞ்சாது, உங்கள் சொத்துக்களையும், பொருட்கள் அனைத்தையும் இஸ்லாமியர்களுக்கு பங்கு போட்டு கொடுத்து விடுவார்கள். பொய் 3. உங்களிடம் 2 எருமை மாடுகள் இருந்தால், காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும்பட்சத்தில் ஒரு மாட்டை உங்களிடம் இருந்து பறித்துவிடுவார்கள். பொய் 4. காங்கிரஸ் இங்கு இறந்துகொண்டு இருப்பதால், பாகிஸ்தான் அழுது கொண்டு இருக்கிறது. காங்கிரசின் இளவரசர், இந்தியாவின் பிரதமராக வேண்டும் என பாகிஸ்தான் விரும்புகிறது.

பொய் 5. அரசாங்கத்தின் டெண்டர் நடைமுறைகளில் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு என காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் உள்ளதாக பொய் தகவலை பரப்பியுள்ளார் மோடி. பொய் 6. ராமர் கோயில் நிகழ்வை புறக்கணித்தவர்கள் தான் I.N.D.I.A கூட்டணியில் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். பொய் 7. இந்திய அரசியலமைப்பை மாற்றி OBC, SC,ST மக்களின் இட ஒதுக்கீட்டை பறித்து ஜிகாதி வாக்கு வங்கியிடம் தர காங்கிரஸ் முயல்கிறது.

பொய் 8. எனக்கு சொந்தமாக வீடு சைக்கிள் கூட இல்லை என்றார் மோடி. ஆனால் 2019 மக்களவைத் தேர்தல் வேட்புமனுவில் குஜராத் காந்திநகரில் ₹1.10 கோடி மதிப்பில் சொந்த வீடு இருப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். பொய் 9. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பரம்பரை வரியின் கீழ், 55 சதவீத மக்களின் பரம்பரை சொத்து பறிமுதல் செய்யப்பட்டு, மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். பொய் 10. நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சொன்னதாக பொய்யான தகவலை கூறியுள்ளார் மோடி” என இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Video thumbnail
புதிய கூட்டணி | விஜய் சீமான் அன்புமணி இணைவதற்கு வாய்ப்பு | திமுக விதைத்ததை அறுவடை செய்யும்
09:49
Video thumbnail
அமித் ஷா, ஆர்.எஸ்.எஸ்-ன் திட்டம்
00:56
Video thumbnail
சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் இயக்கங்கள் பங்கேற்கவில்லை
00:34
Video thumbnail
மீண்டும் மீண்டும் உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் ஆளுநர்
00:43
Video thumbnail
எடப்பாடி பழனிசாமி அதை செய்வாரா?
00:46
Video thumbnail
பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுக காணாமல் போய்விடும்
00:43
Video thumbnail
அதிமுக - பாஜக கூட்டணி தமிழ்நாட்டின் மக்களின் எதிரான கூட்டணி
00:44
Video thumbnail
துணைவேந்தர்கள் மாநாடு - ஆளுநர் அழைப்பு | மீண்டும் மீண்டும் உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் ஆளுநர்
11:51
Video thumbnail
அதிமுக - பாஜக கூட்டணி தமிழ்நாட்டின் மக்களின் எதிரான கூட்டணி | EPS | ADMK | BJP | Modi | Amit Shah
07:24
Video thumbnail
உயர்கல்வி தரவரிசையில் தமிழ்நாடு நம்பர் 1
00:57
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img