நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
“முருகனின் மனைவிக்கு அங்கன்வாடி பணியை வழங்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!”
மக்களவைத் தேர்தலில் ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்கக்கோரி அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பம்பரம் சின்னம் தொடர்பாக காலை 09.00 மணிக்குள் முடிவெடுக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், ம.தி.மு.க.வின் வழக்கறிஞர்களுக்கு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் மின்னஞ்சல் மூலம் பதில் அளித்துள்ளது. அதில், மக்களவைத் தேர்தலில் ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது. ஒரே ஒரு தொகுதியில் போட்டியிடுவதால் பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என விளக்கம் அளித்துள்ளது.
பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார்!
பம்பரம் சின்னம் கிடைக்காவிட்டால் வேறு சின்னத்தில் போட்டி என ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.