ம.தி.மு.க. எம்.பி. கணேசமூர்த்தி இன்று (மார்ச் 28) காலமானார்.
திகார் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவாரா அரவிந்த் கெஜ்ரிவால்?
ஈரோடு மக்களவை உறுப்பினரும், ம.தி.மு.க.வின் மூத்த நிர்வாகியுமான கணேசமூர்த்தி, கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டில் தற்கொலைக்கு முயன்ற நிலையில், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், இன்று (மார்ச் 28) காலை 05.05 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த எம்.பி. கணேசமூர்த்திக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2019- ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கணேசமூர்த்தி வெற்றி பெற்றார்.
ஹைதராபாத் மைதானத்தில் சிக்ஸர்கள் பறந்த ஐ.பி.எல். போட்டி!
கணேசமூர்த்தியின் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளனர்.