கடந்த ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் – மெட்ரோ இரயில் நிர்வாகம்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

நள்ளிரவு 01.00 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு!

கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 80.87 லட்சம் பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் மேற்கொண்டுள்ளதாக சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மெட்ரோ இரயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 01.01.2024 முதல் 31.01.2024 வரை மொத்தம் 84,63,384 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர், 01.02.2024 முதல் 29.02.2024 வரை மொத்தம் 86,15,008 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர், 01.03.2024 முதல் 31.03.2024 வரை மொத்தம் 86,82,457 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர், 01.04.2024 முதல் 30.04.2024 வரை மொத்தம் 80,87,712 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர், அதிகபட்சமாக 08.04.2024 அன்று 3,24,055 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

2024, ஏப்ரல் மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 33,34,498 பயணிகள் (Online QR 1,88,118; Static QR 2,18,565; Paper QR 19,58,328; Paytm3,76,100; Whatsapp – 3,55,571; PhonePe – 2,26,008; ONDC – 11,808), பயண அட்டைகளை(Travel Card Ticketing System) பயன்படுத்தி 33,23,602 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 61,976 பயணிகள், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 4,285 பயணிகள் மற்றும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 13,63,351 பயணிகள்மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர்குறியீடு (OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), வாட்ஸ்அப் டிக்கெட், Paytm App மற்றும் PhonePe போன்ற அனைத்து வகையாக பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000)மூலமாக மற்றும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை பெற்று கொள்ளலாம். மெட்ரோ இரயில்கள் மற்றும் மெட்ரோ இரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி என சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Video thumbnail
அதிமுக பாஜக கூட்டணியில், தவெக இணைத்தால்?
01:09
Video thumbnail
உலகத்திற்கே பாடம் சொல்லிக் கொடுக்கும் ராஜாளி கழுகு
01:14
Video thumbnail
உலகத்திற்கே பாடம் சொல்லிக் கொடுக்கும் ராஜாளி கழுகு | மனிதர்களும் கற்றுக்கொள்ள வேண்டும் | Eagle
07:22
Video thumbnail
தவெக 23 சதவீதம்.. திமுக 45 சதவீதம்.. புதிய கருத்து கணிப்பு..
01:14
Video thumbnail
TVK 23 Percent | DMK 45 Percent | Opinion Poll | புதிய கருத்து கணிப்பு | தவெக | திமுக | MK Stalin
07:49
Video thumbnail
சிவசேனா போல் திமுகவை உடைப்பதே பிஜேபியின் திட்டம்
01:09
Video thumbnail
எடப்பாடியாரைப் போன்று விஜய்யும் பாஜக வலையில் சிக்கிக்கொண்டார்
01:08
Video thumbnail
தவெக-வை தொடங்க சொன்னதே பிஜேபி தான்
01:08
Video thumbnail
கரூர் பிரச்சாரத்தை சினிமா பணியில் பார்க்கும் தவெக தொண்டர்கள்
01:08
Video thumbnail
கரூர் பிரச்சாரத்தை சினிமா பணியில் பார்க்கும் தவெக தொண்டர்கள் |சமூக வலைதளங்களில் கொண்டாடும் தவெகவினர்
12:24
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img