spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

மோடியின் புதிய இந்தியாவில் டிஜிட்டல் வழிப்பறி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

இது பணக்காரர்கள், கோடீஸ்வரர்களுக்கான அரசு அல்ல, ஏழைகளுக்கான அரசு எனக் கூசாமல் புளுகுகிறார் பிரதமர் மோடி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் என்று எளிய மக்களின் ஆசையைத் தூண்டி ஆட்சிக்கு வந்தவர்கள் செய்தது என்ன? சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து வதைத்தார்கள். சுருக்குப் பையில் இருக்கும் பணத்தையும் பறித்துக் கொள்ளும் ஆட்சியாக, மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழைகளிடம் உருவியிருக்கிறார்கள்.

கார்ப்பரேட்களுக்குப் பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி, கார்ப்பரேட் வரியை 30 விழுக்காட்டில் இருந்து 22 விழுக்காடாக குறைத்து, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான கோடிகளை வரிச்சலுகையாக அள்ளித் தந்துவிட்டு, அதை ஈடுகட்ட, மனதில் ஈரமே இல்லாமல், அல்லற்படும் ஏழை மக்களிடம் அரசே இப்படி டிஜிட்டல் வழிப்பறி செய்வதை அனுமதிக்கலாமா? இது பணக்காரர்கள், கோடீஸ்வரர்களுக்கான அரசு அல்ல; ஏழைகளுக்கான அரசு எனக் கூசாமல் புளுகுகிறார் பிரதமர் மோடி. இதுவா ஏழைகளின் நலன் காக்கும் அரசு? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Video thumbnail
மோடியை எச்சரித்த ஸ்டாலின் | பாஜக அரசின் மிக மோசமான திட்டம் | MKStalin | Modi | DMK | BJP
10:30
Video thumbnail
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதி நிலவரம் | விஜய்யின் செல்வாக்கு மொத்தமாக முடிந்தது | TVK | Vijay
18:38
Video thumbnail
மதுரவாயல் திமுக வேட்பாளர் காரப்பாக்கம் கணபதி வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு..
01:47
Video thumbnail
"உங்களுக்காக இந்த இடத்தை உருவாக்கி தருவேன்" - அமைச்சர் நாசர் வாக்குறுதி
01:13
Video thumbnail
"81 ஆயிரம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா.." - அமைச்சர் நாசர்..
00:39
Video thumbnail
"தமிழக முதல்வரே நேரடியாக வந்து ஆய்வு செய்து.." - அமைச்சர் நாசர்..
00:51
Video thumbnail
மாஃபா பாண்டியராஜன் செய்த துரோகம்..
01:51
Video thumbnail
ஆவடியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?
01:21
Video thumbnail
தவெக ஆட்சியில் வீட்டு வாசலுக்கே அரசின் நலத்திட்டங்கள் வந்து சேரும்..- தவெக தலைவர் விஜய்..
01:19
Video thumbnail
தவெக ஆட்சியில் வீட்டு வாசலுக்கே அரசின் நலத்திட்டங்கள் வந்து சேரும்.. - தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்
12:18
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img