மாநில அரசின் புதிய அறிக்கை

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

புதிதாக விண்ணப்பித்துள்ள  சுமார் 2 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியானவர்களுக்கு  மக்களவை தேர்தல் முடிவிற்கு பின் புதிய ரேஷன் அட்டை வழங்கப்படும் என்று உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.New Report of State Government

ரேஷன் கடைகளில் கிடைக்கும் அத்தியாவசிய பொருட்கள், அரசு வழங்கும் உதவி தொகை மற்றும் பேரிடர் கால நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு குடும்ப அட்டை அவசியமாகும்.

தமிழ்நாட்டில் மொத்தம் 2 கோடியே 24 லட்சத்து 19 ஆயிரத்து 359 கார்டுகள் இருக்கின்றன.

சமீபத்தில் நடைமுறைக்கு வந்த கலைஞர் மகளிருக்கான உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்ப அட்டை வைத்துள்ள தகுதி வாய்ந்த பெண்களுக்கு மாதந்தோறும் 1000 ருபாய் உரிமை தொகையாக வழங்கப்பட்டதை தொடர்ந்து பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் புதிய ரேஷன் அட்டைகளை பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளனர்.

New Report of State Government

கடந்த ஜூலை மாதம் புதிய ரேசன் கார்டு வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதிய ரேஷன் அட்டை கோரி இதுவரை சுமார் 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு மக்களவை தேர்தல் முடிவிற்கு பின் தகுதியானவர்களுக்கு  புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி தொடங்கும் என உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img