நாடாளுமன்ற தேர்தலையொட்டி பெரியபாளையம் அருகே வடமதுரையைச் சேர்ந்த பொதுமக்கள் வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணித்து வருகின்றனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியளவில் தொடங்கியது. பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர், சினிமா பிரபலங்கள் உட்பட பல்வேறு வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகிறார்கள். இதில் முதல் முறை வாக்களிக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை 10.92 லட்சம் பேர் ஆகும்.
இந்த நிலையில் மதுரை மாவட்டம் பெரியபாளையம் அருகே வடமதுரையில் பொதுமக்கள் வாக்களிக்காமல் தங்களின் வாக்கினை புறக்கணித்து வருகின்றனர். இதற்கு காரணம் என்னவென்றால் வடமதுரை பெரியகாலனி என்ற பெயரை எர்ணாங்குப்பம் என மாற்றியதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்து தங்களது வாக்கினை செலுத்தாமல் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்படுகிறது.