திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் துணை மின் நிலையத்தில் உயர் மின் அழுத்த டிரான்ஸ்ஃபார்மரில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட நிலையில், 2 மணி நேரம் போராடி உயிரை பணயம் வைத்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த பட்டாபிராமில் துணை மின் நிலையம் உள்ளது. இந்த துணை மின் நிலையத்தில் இருந்து சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 30000 க்கும் மேற்பட்ட இணைப்புகளுக்கு மின்சாரம் வழங்கபட்டு வருகிறது. இந்தநிலையில் இரவு சுமார் 11 மணியளவில் 16000kvA உயரழுத்த ட்ரான்ஸ்பார்மரில் மின் கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீயானது மேலும் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. இது குறித்து மின் வாரிய அதிகாரிகள் உடனடியாக ஆவடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் திரவ வேதி கலந்த foam அடித்து தீயை அணைக்க கூடிய பணியில் ஈடுபட்டனர். இருந்த போதிலும் டிரான்ஸ்பார்மரில் இருந்த ஆயிலில் தீ பரவியதால் கட்டுக்குள் கொண்டு வர சிரமம் ஏற்பட்டது. தீயானது கொளுந்து விட்டு மள மளவென எரிய துவங்கியது.
இதனால் வான் உயர கரும்புகை எழுந்து குடியிருப்பு பகுதியில் சூழ்ந்ததால் பொது மக்களுக்கு கண் எரிச்சல்,மூச்சு திணறல் உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டது.இதனை தொடர்ந்து ஆவடி,அம்பத்தூர், செங்குன்றம்,பூந்தமல்லி மற்றும் ஆவடி மத்திய அரசுக்கு சொந்தமான தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட 5 நிலையங்களிலிருந்து 30கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்க கூடிய பணியில் ஈடுபட்டனர்.தீயணைப்பு வீரர்கள் foam பிழ்ச்சி அடித்து சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்து காரணமாக பட்டாபிராம்,இந்து கல்லூரி, சேக்காடு, தண்டுரை, முத்தாபுதுபேட்டை, கோபால புரம் உள்ளிட்ட பகுதி முழுவதும் தற்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியுள்ளது. ஏற்கனவே தினம் தோறும் இரவு நேரங்களில் அறிவிக்க படாத மின் வெட்டு நிலவி வரும் சூழலில்,இந்த தீ விபத்து காரணமாக இரண்டு மூன்று நாட்களுக்கு மின் வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மின் தடை காரணமாக முதியவர்கள், குழந்தைகள்,பெண்கள் என பொது மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இது குறித்து பட்டாபிராம் போலீசார்,தீயணைப்பு அதிகாரிகள், மின்வாரிய துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்ட முன்னாள் அமைச்சரூம் ஆவடி சட்டமன்ற உறுப்பினருமான நாசர் மின்சார துறை அமைச்சர் மற்றும்
மின் உயர் அதிகாரிகளிடம் பேசி புதிய ட்ரான்ஸ் பார்மர்கள் வழங்கி இப்பகுதி மக்களுக்கு விரைவில் மின்சாரம் வழங்கிட அறிவுறுத்தினார்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…