பொன்முடி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தரப்பின் கோரிக்கையை ஏற்று அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
ஆளுநர் தமிழிசை திடீர் ராஜினாமா!
பொன்முடிக்கு அமைச்சர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கக்கோரி, ஆளுநருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்த நிலையில், உச்சநீதிமன்றம் தீர்ப்பை மட்டுமே நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது; குற்றவாளி இல்லை என அறிவிக்கவில்லை என்று குறிப்பிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில், பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுத்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி மற்றும் வில்சன் கோரிக்கையை ஏற்று அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய பங்குச்சந்தையில் மீண்டும் அதிகரிக்கும் முதலீடுகள்!
இதையடுத்து, இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.