spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

கிராம நிர்வாக அதிகாரியை தாக்கிய திமுக மாவட்ட கவுன்சிலரை கைது செய்ய வேண்டும் – ராமதாஸ்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த கிராம நிர்வாக அதிகாரியை தாக்கிய திமுக மாவட்ட கவுன்சிலரை கைது செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த ஆயந்தூர் கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அப்பகுதியின் கிராம நிர்வாக அலுவலர் சாந்தியை அதே ஊரைச் சேர்ந்த திமுக மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் இராஜீவ்காந்தி என்பவர் கடுமையாகத் தாக்கியதுடன், தகாத வார்த்தைகளைக் கூறியும் திட்டியிருக்கிறார். பணியில் இருந்த அரசு ஊழியரை திமுக மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் தாக்கியும், திட்டியும் அவமரியாதை செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

கிராம நிர்வாக அதிகாரி சாந்தி தாக்கப்பட்டது தொடர்பாக காணை காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. கிராம நிர்வாக அதிகாரியைத் தாக்கிய திமுக நிர்வாகி இராஜீவ்காந்தியை உடனடியாக கைது செய்து அவருக்கு சட்டப்படி தண்டனை பெற்றுத் தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக் குறிப்பிட்டுள்ளார்.

Video thumbnail
சட்டப்பேரவையில் முதல்வர் சொன்ன குட்டிக்கதை..- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்
00:46
Video thumbnail
"அப்பாவை அங்க தேடாதீங்க" முதலமைச்சர் விஜய் பேச்சுக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி
01:12
Video thumbnail
புதிய பேருந்துகள் இயக்கத்தை தொடங்கி வைத்து பெரம்பூர் செல்லும் 29A பேருந்தில் முதல்வர் விஜய் பயணம்
00:48
Video thumbnail
"2 நாளில் முக்கிய முடிவு.." வைகோ பரபரப்பு பேச்சு
02:27
Video thumbnail
குழந்தைகளுக்கு தங்க மோதிரம், பரிசுப் பெட்டகங்களை அமைச்சர் ஆனந்த் வழங்கினார்.
01:34
Video thumbnail
"இதனால் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு வருவோர் எண்ணிக்கை அதிகரிக்கும்.." அமைச்சர் அருண்ராஜ்
01:44
Video thumbnail
இனி நல்லதே நடக்கும் - பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்த பின் அன்புமணி பேட்டி
00:34
Video thumbnail
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஹன்சிகா வழிபாடு
01:39
Video thumbnail
பாமக நிறுவனர் ராமதாஸை தைலாபுரம் தோட்டத்தில் தனது குடும்பத்தினருடன் சந்தித்தார் அன்புமணி..
02:14
Video thumbnail
திருச்செந்தூர் முருகன் கோயிலில் கட்டண உயர்வு இல்லை.. - அமைச்சர் ரமேஷ்
01:34
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img