spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

மளிகைப் பொருட்களை நியாய விலைக்கடைகள் மூலம் மானிய விலையில் வழங்க வேண்டும் – ராமதாஸ்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

மளிகைப் பொருட்களை நியாய விலைக்கடைகள் மூலம் மானிய விலையில் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், தமிழ்நாட்டில் எண்ணெய் மற்றும் மளிகைப்பொருட்களின் விலைகள் கடந்த ஒரு மாதத்தில் பெருமளவில் உயர்ந்திருக்கின்றன. பருப்பு வகைகள், மஞ்சள், மிளகாய்த்தூள் ஆகியவற்றின் விலைகள் கிலோவுக்கு ரூ.15 வரை உயர்ந்துள்ளன. மிளகு, சீரகம், மிளகாய், மல்லி உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் விலைகள் கிலோவுக்கு ரூ.50 வரை உயர்ந்திருக்கின்றன. எண்ணெய் விலைகள் லிட்டருக்கு ரூ.30 வரை உயர்ந்திருக்கின்றன. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். எண்ணெய், மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் மாதந்திர செலவு ரூ.2000 வரை உயர்ந்திருக்கிறது.

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு அவற்றின் தட்டுப்பாடு ஒரு காரணம் என்றால், அப்பொருட்களின் பதுக்கலை தடுக்கத்தவறிய தமிழக அரசின் அலட்சியம் இன்னொரு காரணமாகும். அந்த வகையில் விலைவாசி உயர்வுக்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். கடந்த சில மாதங்களில் அரிசி விலை கிலோவுக்கு ரூ.15 வரை உயர்ந்ததால் பொதுமக்கள் கடுமையான்ன பாதிப்புகளுக்கு உள்ளானார்கள். இப்போது மற்ற பொருட்களின் விலைகளும் உயர்ந்திருப்பதால் மக்களால் சமாளிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை. இதற்காகத் தான் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சரின் தலைமையில் விலைக் கண்காணிப்புக் குழு செயல்பட்டு வருகிறது. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் எண்னெய், பருப்பு மற்றும் மளிகைப் பொருட்களின் விலைகள் அதிகரித்திருப்பது விலை கண்காணிப்புக் குழுவுக்கு தெரியுமா? விலைகளைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வசதியாக இது குறித்த அறிக்கைகளை விலைக் கண்காணிப்புக் குழு அரசிடம் தாக்கல் செய்ததா? என்பது தெரியவில்லை.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். எண்ணெய், பருப்பு விலையை கட்டுப்படுத்தும் நோக்குடன் நியாயவிலைக்கடைகளில் குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படும் துவரம் பருப்பு மற்றும் பாமாயிலின் அளவை 2 கிலோவாக உயர்த்த வேண்டும். தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தவாறு நியாயவிலைக்கடைகள் மூலம் மீண்டும் மலிவு விலையில் உளுந்து வழங்க வேண்டும். மளிகைப் பொருட்களையும் நியாயவிலைக்கடைகள் மூலம் மானிய விலையில் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

Video thumbnail
மெக்சிகோ நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு
00:46
Video thumbnail
இந்தியாவின் மதவெறுப்பு பிரச்சாரம் | அமெரிக்கா கொடுக்கும் நெருக்கடி | India | America
13:23
Video thumbnail
சென்னை தலைமைச் செயலகத்தில் ஊழியர் கோரிக்கைகள் | அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
01:21
Video thumbnail
வைகோவின் சமத்துவ நடைபயணத்தினை துவக்கி வைக்க திருச்சி வந்தடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
00:58
Video thumbnail
கிறிஸ்தவர்கள் தாக்குதல் விவகாரம் | மௌனம் காக்கும் விஜய், சீமான்
01:20
Video thumbnail
இசைஞானி இளையராஜா பாட்டுப்பாடி ரசிகர்களுக்கு வாழ்த்து
00:35
Video thumbnail
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள்
00:24
Video thumbnail
ஆவடி பொதுமக்களுடன் சேர்ந்து, புத்தாண்டை கேக் வெட்டி கொண்டாடிய போலீசார்
00:39
Video thumbnail
"அர்ஜுனன் பேர் பத்து என்னுடைய 300-வது படம். அனைவருக்கும் நன்றி”- நடிகர் யோகி பாபு
01:02
Video thumbnail
ஆவடி காவல் ஆணையரகத்தில், பிரேம் ஆனந்த் சின்ஹா புதிய ஆணையராகப் பொறுப்பேற்றார்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img