ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் பெயர் கொண்ட 5 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டதாக மாவட்டத் தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
சுட்டெரிக்கும் வெயில்- தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்!
பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது வேட்பு மனுவை மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்திருந்தார்.
ஓ.பன்னீர்செல்வம் பெயரில் 6 சுயேச்சைகள் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்த நிலையில், இன்று (மார்ச் 28) நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனையில் ஓ.பன்னீர்செல்வம் பெயர் கொண்ட 5 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
ம.தி.மு.க. எம்.பி. மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
இந்த ஐந்து பேருக்கும் குலுக்கல் முறையில் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.