ரம்ஜான் பண்டிகையையொட்டி, தமிழ்நாட்டில் 4- ஆம் வகுப்பு முதல் 9- ஆம் வகுப்புகளுக்கான அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
நடிகர் டேனியல் பாலாஜி காலமானார்!
பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, தேர்வுகளை ஒத்திவைக்க சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் பெற்றோரிடம் இருந்து கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன. அதன் அடிப்படையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 4- ஆம் வகுப்பு முதல் 9- ஆம் வகுப்பு வரையிலான தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு அணியை வீழ்த்தியது கொல்கத்தா அணி!
அதன்படி, ஏப்ரல் 10- ஆம் தேதி நடைபெற்றவிருந்த அறிவியல் தேர்வு ஏப்ரல் 22- ஆம் தேதிக்கும், ஏப்ரல் 12- ஆம் தேதி நடைபெறவிருந்த சமூக அறிவியல் தேர்வு ஏப்ரல் 22- ஆம் தேதிக்கும் மாற்றப்பட்டுள்ளது. புதிய அட்டவணையின் படி தேர்வுகளை நடத்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களைக் கேட்டுக் கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.