சாலையில் பழுதாகி நின்ற டிராக்டர் மீது மோதிய அரசுப் பேருந்து!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசுப் பேருந்து பூந்தமல்லி அருகே டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

புதிய சாதனை படைத்த விராட் கோலி!

திருவள்ளுர் மாவட்டம், திருமழிசையில் சாலையின் நடுவே டிராக்டர் ஒன்றில் டயர் வெடித்து பழுதாகி நின்றுக் கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக 48 பயணிகளுடன் வந்த அரசுப் பேருந்து டிராக்டர் மீது மோதி சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி நின்றுள்ளது.

இந்த விபத்தில் நல் வாய்ப்பாக பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஓட்டுநர் ரவிக்குமார் லேசான காயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகிறார். திருமழிசை சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காவல்துறை அதிகாரியிடம் கடிந்துக் கொண்ட அமைச்சர் துரைமுருகன்!

இதனிடையே, விபத்து குறித்து வழக்குப்பதிவுச் செய்த திருமழிசை காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img