தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி வேட்பு மனுத்தாக்கல் செய்ய அதிக கூட்டத்துடன் வந்த பா.ம.க.வினர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
ம.தி.மு.க.வுக்கு அதிர்ச்சிக் கொடுத்த உயர்நீதிமன்றம்!
வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய அதிகபட்சமாக 3 வாகனங்களில் வருவதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நான்கு வாகனங்களில் வந்த சௌமியா அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் பா.ம.க.விற்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், தருமபுரி மக்களவைத் தொகுதியில் பா.ம.க.வின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.யின் மனைவியும், பசுமை தாயகத்தின் தலைவருமான சௌமியா அன்புமணி போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பா.ம.க.வின் தேர்தல் அறிக்கை வெளியீடு!
இதற்காக சௌமியா அன்புமணி பொதுமக்களை நேரில் சந்தித்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.