சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு பதிவு – மேலும் 2 பேர் கைது!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

பெண் வன்கொடுமை , போதைப்பொருள் புழக்கம் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சவுக்கு சங்கர் உட்பட அவரது உதவியாளர்கள் இருவர் மீது பழனிச்செட்டிபட்டி போலீசார் வழக்குப் பதிந்து சிறையில் அடைத்தனர்.

காவல் துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறு பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் நேற்று காலை கோவை மாநகர சைபர் க்ரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனிடையே தேனியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கைது செய்வதற்காக வந்த கோவை போலீசாருக்கு உதவியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாக்கியம் என்பவரை பெண் என்றும் பாராமல், சவுக்கு சங்கர் தரக்குறைவாக பேசியதோடு கீழே தள்ளியுள்ளதாகவும். இது தொடர்பாக தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி சார்பு ஆய்வாளர் பாக்கியம் அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது, வழக்கு விசாரணைக்காக கைது செய்ய வந்த கோவை போலீசாருடன் சம்பவ இடத்தில் சவுக்கு சங்கர் மற்றும் அவருடன் வந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கிருந்த நான், சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டும் எனக் கூறியதற்கு, பெண் என்றும் பாராமல் தரக்குறைவாக பேசியதோடு கீழே தள்ளிவிட்டனர். மேலும் அவருடன் இருந்த இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த ராம்பிரபு மற்றும் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராஜரத்தினம் ஆகிய இருவரும், தன்னை அரசுப் பணி செய்ய விடாமல் தடுத்ததோடு மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து சவுக்கு சங்கரை மட்டும் கோவை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்ற பிறகு, அவர்கள் வந்த இன்னோவா காரில், தடை செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தி வரப்பட்டதாக கிடைத்த ரகசிய தகவலில், தேனி வட்டாட்சியர் ராணி முன்னிலையில் சோதனை செய்ததில், 409 கிராம் கஞ்சா மற்றும் 15,500 ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது

மேலும் அவர்கள் தங்கியிருந்த அறையில், நடத்திய சோதனையில், பணம் 54,130 ரூபாய் மற்றும் வங்கி ஏடிஎம் கார்டுகள் உள்ளிட்டவைகள் கைப்பற்றப்பட்டதால், இது தொடர்பாக சவுக்கு சங்கர் மற்றும் அவரது உதவியாளர்கள் ராம் பிரபு மற்றும் ராஜரத்தினம் ஆகிய மூவர் மீது,IPC 294 (b), 353 மற்றும் TN Women Harrasment prohibition Act 4, NDPS Act 8(C), 20(b)(II)(A), 29(1), 25 என அரசுப் பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் போதைப்பொருள் புழக்கம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு. சவுக்கு சங்கரின் உதவியாளர்கள் ராம் பிரபு மற்றும் ராஜரத்தினம் ஆகிய இருவரிடம் தேனி மாவட்ட கூடுதல் துணைக் காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்தி பெரியகுளம் கிளை சிறையில் அடைத்தனர்.

Video thumbnail
திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி - The Print
01:13
Video thumbnail
அதிமுக பாஜக கூட்டணியில், தவெக இணைத்தால்?
01:09
Video thumbnail
உலகத்திற்கே பாடம் சொல்லிக் கொடுக்கும் ராஜாளி கழுகு
01:14
Video thumbnail
உலகத்திற்கே பாடம் சொல்லிக் கொடுக்கும் ராஜாளி கழுகு | மனிதர்களும் கற்றுக்கொள்ள வேண்டும் | Eagle
07:22
Video thumbnail
தவெக 23 சதவீதம்.. திமுக 45 சதவீதம்.. புதிய கருத்து கணிப்பு..
01:14
Video thumbnail
TVK 23 Percent | DMK 45 Percent | Opinion Poll | புதிய கருத்து கணிப்பு | தவெக | திமுக | MK Stalin
07:49
Video thumbnail
சிவசேனா போல் திமுகவை உடைப்பதே பிஜேபியின் திட்டம்
01:09
Video thumbnail
எடப்பாடியாரைப் போன்று விஜய்யும் பாஜக வலையில் சிக்கிக்கொண்டார்
01:08
Video thumbnail
தவெக-வை தொடங்க சொன்னதே பிஜேபி தான்
01:08
Video thumbnail
கரூர் பிரச்சாரத்தை சினிமா பணியில் பார்க்கும் தவெக தொண்டர்கள்
01:08
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img