நாடாளுமன்ற தேர்தலையொட்டி மயிலாடுதுறை நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் காளியம்மாளை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மயிலாடுதுறையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
நாம் தமிழர் கட்சி சார்பாக #ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் காளியம்மாள் அவர்களை ஆதரித்து நேற்று மயிலாடுதுறை விஜயா திரையரங்கம் அருகில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் சீமான் பேசியதாவது, ஒரு காலம் வரும் ஊழல் லஞ்சம் என்கிற வார்த்தை அழிந்து போகும். பசி என்கிற சொல்லே தாய் தமிழகத்தில் இல்லாமல் ஒழியும். மறுபடியும் மறுபடியும் சொல்கிறேன் நாங்கள் வரும் போது இந்த மண் சொர்க்கமாக மாறும். தண்ணீரில் தேவையில் தன்னிறைவை அடைவோம். 4500 டிஎம்சி தண்ணீர் எனக்கு கிடைக்கிறது. 1500 டிஎம்சி தண்ணீர் தான் வருகிறது. மீதி கடலில் கலக்கிறது அதை சேமிப்பேன். கணக்கில்லாத நீர்த்தேக்கங்களைஉருவாக்குவேன். 100 ஏக்கர் 200 ஏக்கர் என நீர்த்தேங்கங்கள் முழுவதும் துணை காவல்படையை உருவாக்குவேன். பிளாஸ்டிக்கே என் மண்ணுள் நுழையாது.
மேலும் பேசிய அவர் ஒரு சீமை கருவேல மரங்களை கேரளாவில் காட்டிப்பார். அவர்களால் முடியும் நம்மால் முடியாதா? இங்க நமக்கு அப்படியில்லையே எங்க பாத்தாலும் சீமை கருவேல மரங்கள். மாணவனா நூறு மரங்கள் நட்டினால் பிராக்டிக்கல் மார்க் போடனும். ஒவ்வொரு பிறந்த நாளுக்கு மரம் என் பிள்ளைகளுக்கு சொல்லுவேன். உனக்கு பிடித்த பேரை மரத்திற்கு வை மரங்களுடன் பேசுங்கள். எல்லாவற்றிக்கிற்கும் உயிர் இருக்கு உணர்ச்சி இருக்கு என இவ்வாறு பேசினார்.