நடாளுமன்ற தேர்தலையொட்டி கடலூர் மாவட்டம் சிதம்பரம் தொகுதி விசிக வேட்பாளர் திருமாவளவனை ஆதரித்து, காட்டுமன்னார் கோவிலில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரையில், திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருமாவளவன் இந்த ஆண்டும் அதே தொகுதியில் களம் காண்கிறார்.
நேற்று காட்டுமன்னார் கோவில் தாலுகா, லால்பேட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., அவர்கள் கலந்து கொண்டு சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் சகோதரர் டாக்டர் தொல்.திருமாவளவன் அவர்களை ஆதரித்து பரப்புறையாற்றினார்கள். பொதுக்கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மூத்த நிர்வாகிகள், இந்தியா கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் பெரும் திரளாகக் கலந்து கொண்டார்கள்.