நாடாளுமன்ற தேர்தலையொட்டி திண்டுக்கல் மாவட்டம் மானூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரையில், திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவி வருகிறது.
நேற்று (04.04.2024) திண்டுக்கல், மானூரில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., அவர்கள் இந்தியா கூட்டணி கட்சிகளில் இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்களை ஆதரித்து பரப்புரையாற்றி வாக்கு சேகரித்தார் பரப்புரையின் போது, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு பி.சதீஷ்குமார் அவர்கள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சியின் மூத்தத் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டார்கள்.