spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

போராளி ஸ்டேன் சுவாமியின் சேவைகளை நினைவு கூறுவது நமது கடமையாகும் – செல்வப்பெருந்தகை!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

ஸ்டேன் சுவாமி அவர்களின் பிறந்தநாளான இன்று அவரது சேவைகளை நினைவு கூற விரும்புகிறேன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக போராடிய மனித உரிமை செயற்பாட்டாளர் திரு. ஸ்டேன் சுவாமி அவர்களின் பிறந்தநாளான இன்று அவரது சேவைகளை நினைவு கூற விரும்புகிறேன். திருச்சி மாவட்டம், விரகலூரில் பிறந்த இவர், பிற்காலங்களில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் வாழ்கிற பழங்குடியின மக்களோடு நெருங்கி பழகி, அவர்களின் வாழ்வாதாரத்திற்காகவும், உரிமைகளுக்காகவும் போராடியவர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு பீமாகொரேகான் நினைவிடத்தில் வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்டதாக தொடக்கத்தில் பூனா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி, பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குகளை பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தது. சிறைச்சாலையில் நீண்டகாலமாக இருந்த போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஜாமினில் வெளிவருவதற்கு நீதிமன்றத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இவருக்கு ஜாமின் வழங்குவதை மோடி அரசு தேசிய புலனாய்வு முகமை மூலமாக ஆட்சேபனைகளை எழுப்பி தொடர்ந்து மறுத்து வந்தது.

இந்நிலையில் கடந்த 2021 ஜூலை 5 அன்று தமது 83-வது வயதில் நீதிமன்ற ஆணையின் பேரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது காலமான செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கிறிஸ்துவ சமுதாயத்தில் பிறந்து பட்டியலின, பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக தமது வாழ்நாளை அர்ப்பணித்த சேவை மனப்பான்மை கொண்ட மனித உரிமை செயற்பாட்டாளரான திரு. ஸ்டேன் சுவாமி அவர்களின் பிறந்தநாளில் அவரை நினைவு கூறுவது மிகவும் பொருத்தமானது. இவரைப் போன்றவர்களின் வாழ்க்கை இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு உந்துசக்தியாக இருக்கும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இன்றைய மோடி ஆட்சியில் பயங்கரவாத தடுப்புச் சட்டம், பணபரிமாற்ற தடைச் சட்டம் ஆகியவற்றை தவறாக பயன்படுத்தி கொடுமைக்கும், அச்சுறுத்தலுக்கும் ஆளான எண்ணற்ற மனித உரிமை செயற்பாட்டாளர்களில் திரு. ஸ்டேன் சுவாமி முதன்மையானவராக கருதப்படுகிறார். அத்தகைய போராளியை அவரது பிறந்தநாளில் நினைவு கூறுவது நமது கடமையாகும் என குறிப்பிட்டுள்ளார்.

Video thumbnail
அன்று-இன்று காளியம்மாள் பேச்சு #ADMK #NTK #Kaliyammal #EPS #EdappadiPalaniswami
00:51
Video thumbnail
"வேளச்சேரி - செயின்ட் தாமஸ் மவுன்ட் விரைவு ரயில் சேவை" - எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன்
01:22
Video thumbnail
மிகவும் மென்மையான மனிதர்… நடனம் ஆடுவதில் விஜய் சிறந்தவர் -நடிகை தமன்னா
00:30
Video thumbnail
"அஜித் சார், மிகவும் நல்ல மனிதர் மென்மையானவர்" -நடிகை தமன்னா
01:00
Video thumbnail
"ரீல்ஸ் நல்லா போடுறீங்க.. அதேபோல படிப்பிலும் கவனம் செலுத்துங்கள்.." முதல்வர் அட்வைஸ்
00:38
Video thumbnail
இன்ஸ்டாவில் கலக்கும் சிறுவர்கள் தேவா, ஜீவா உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
02:12
Video thumbnail
"MGR-குறித்த வார்த்தைகளுக்கு என்னை மன்னித்து கொள்ளுங்கள்.." - தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத்
01:41
Video thumbnail
சசிகலாவின் புதிய கட்சியின் பெயர் அறிவிப்பு
02:15
Video thumbnail
ரஜினியின் ஆளுமையை கொச்சைப்படுத்தக் கூடாது -விசிக தலைவர் திருமாவளவன் பதில்
02:02
Video thumbnail
நடிகர் விஜய்க்கு மன வலிமை உள்ளதா? -மீசை ராஜேந்திரன்
01:58
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img