ஜெயக்குமார் இறப்பு காங்கிரஸ் பேரியக்கத்திற்கு மிகப்பெரிய இழப்பு என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், இன்று எங்களுடைய திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் தலைவர் இயற்கை எய்திருக்கிறார். காங்கிரஸ் பேரியக்கத்திற்கு மிகப்பெரிய இழப்பு. தென் மாவட்டத்தில் ஒரு வலிமையான தலைவரை நாங்கள் இழந்திருக்கிறோம். காங்கிரஸ் கட்சியின் தூணாக இருந்தவர் சாய்ந்திருக்கிறார். அவருடைய குடும்பத்திற்கும் மற்றும் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பேரியக்கத் தோழர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். விசாரணை காவல்துறை நேர்மையாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். எந்தவித சந்தேகமும் இல்லாமல் எங்களுடைய மாவட்ட தலைவர் ஜெயக்குமாருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்களுடைய புகாரை ஏற்று நேர்மையான முறையில் எந்த அக்கிரமும் வராத முறையில் விசாரிக்க சொல்லிருக்கிறோம். அதே போன்று மருத்துவமனையில அந்த மருத்து பிரேத பரிசோதனை செய்யும் பொழுது வீடியோ கிராப் செய்ய சொல்லியிருக்கிறோம். கோரிக்கைகளையும் அவர்களும் செய்வதாக உறுதியளித்திருக்கிறார்கள்.
மேலும் பேசிய அவர் எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற கட்சி தலைவர் ராஜேஷ்குமார் அங்கிருந்து அதனை கவனித்து வருகிறார். நாளை காலை 9 மணிக்கு மேல் அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என அவரது குடும்பத்தார்கள் தெரிவித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டிலுள்ள காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அறிவுறுத்திருக்கிறேன். யார் தவறு செய்திருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும். எங்கள் குடும்பத்திலே மிகப்பெரிய இழப்பு அண்ணாமலை சொல்வதற்கு என்ன இருக்கிறது. நாங்கள் எப்படி விசாரணையை மேற்கொள்ள வேண்டும், அந்த எப்படி கண்டறிய வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். அநாகரிகமற்ற கட்சிக்காரர்கள் என்றால் அது பாஜக காரர்கள் தான். அவங்க கட்சியில இந்த மாதிரி இறந்திருந்தா நாங்கள் இப்படி கமெண்ட் அடிப்போமா, எங்களுக்கு அக்கறை இருக்கு என்ன நடந்தது என்பதை எங்களுடைய கட்சி தலைமைக்கு சொல்லுவோம். அவரு வேலையை அவரை பார்க்க சொல்லுங்க எங்க வேலையை நாங்க பார்ப்போம். என இவ்வாறு கூறினார்.