காவிரி விவகாரத்தில் கர்நாடகா காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போராட தயார் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கத்தின் முகப்பில் நேற்று நீர், மோர் பந்தலை திறந்து வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் மாயமாகி இருக்கிறது. இதுகுறித்து உள்துறை அமைச்கம் 4 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமிஷ்தா, தமிழ்நாட்டில் உள்ள பாஜக தலைவர்களும் ஏன் வாய்திறக்கவில்லை. இந்தியாவியேலே குஜராத் கடற்பகுதியில் அதிகமான அளவில் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதைப் பொருள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து வருகிறது.
மத்திய அரசுக்கு தெரியாமல் இவ்வளவு லட்சம் கோடி போதைப் பொருள் வருவதற்கு வாய்ப்பு இல்லை. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தான் உளவு அமைப்புகள், கடற்படை, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு உள்ளிட்டவை இருக்கிறது. பாஜகவிற்கு தெரியாமல் போதைப் பொருள் எப்படி இந்தியாவிற்கு வர முடியும். பா.ஜ.கவின் ஆட்சியாளர்கள் இதற்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள் என கேள்வியெழுப்பினார். இந்தியாவில் மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் போதை பொருட்களால் பாழடைவதற்கு பாஜகதான் காரணம். தமிழ்நாட்டில் உள்ள ஒருவர் போதைப் பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டதை மட்டும் பேசும் பாஜக. இதுகுறித்தும் பேசவேண்டும் என கூறினார். காவிரி விவகாரத்தில் அரசியலுக்காக கர்நாடக காங்கிரஸ் பேசி வருகிறது. தமிழகத்தின் அனுமதி இல்லாமால் ஒரு கல்லைக் கூட வைக்க முடியாது. ஒழுக்காற்று குழு பாராபட்சமாக இருக்கிறது.
ராணுவத்தின் உதவியுடன் தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி கர்நாடகா காங்கிரஸ் கட்சிக்கு எதிராக நாங்கள் போராட தயாராக இருக்கிறோம். பா.ஜ.க நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைய போவதால், நோட்டாவின் கீழ் வாக்கு பெறுவதற்கு சட்டமன்ற தேர்தலுக்கு அண்ணாமலை தயார் ஆகிறார். கிண்டியில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் நினைவிடத்தை தமிழக அரசு முறையாக பராமரிக்க வேண்டும். அமேதி, ரேபரேலி தொகுதியில் நாளையுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெறவுள்ள நிலையில் காங்கிரஸ் இதுவரை வேட்பாளரை அறிவிக்காது ஏன் என்று கேள்வியெழுப்பினார். அங்கு போட்டியிட பயப்படுகிறதா ? என்ற கேள்விக்கு பிரிட்டிஷ்காரர்கள் விரட்டி அடித்தவர்கள் நாங்கள் என்றும் எங்களுக்கு பயம் இல்லை. என இவ்வாறு கூறினார்.