spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

தேனாம்பேட்டையில் மே 1 ஆம் தேதி முதல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நீர் மோர் பந்தல் – செல்வப்பெருந்தகை!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தேனாம்பேட்டையில் மே 1 ஆம் தேதி முதல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் வரலாறு காணாத அளவில் வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்து வருகிறது. வானிலை ஆராய்ச்சி மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த இருவார காலமாக 13 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்து மக்களை வாட்டி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் அவர்களின் தாகத்தை தீர்க்க நீர்மோர் பந்தல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட உள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள காமராஜர் அரங்க முகப்பிலும், சென்னை திரு.வி.க. சாலையில் அமைந்துள்ள சத்தியமூர்த்தி பவன் முகப்பிலும் மக்களின் தாகத்தை தீர்க்க நீர்மோர் பந்தல் மே 1 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை அமைக்கப்படவுள்ளது. இவ்விரு இடங்களிலும் வருகிற மே 1 ஆம் தேதி நீர்மோர் பந்தல்களை தொடக்கி வைக்க இருக்கிறேன்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியோடு இதனை நடத்த விரும்புகிறோம். இதை பொதுமக்கள் பெருமளவில் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம். சென்னையில் முன்னோட்டமாக நடைபெறவுள்ள நீர்மோர் பந்தல் அமைப்பதைப் போல தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் தங்களது பகுதிகளில் பரவலாக தேர்தல் ஆணையத்தின் அனுமதியோடு இத்தகைய தண்ணீர் பந்தல் மற்றும் நீர்மோர் பந்தல்களை அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். மக்களின் தாகத்தை தீர்க்கிற சேவையில் காங்கிரஸ் கட்சி முக்கிய பங்கு வகிப்பதை நோக்கமாக கொண்டு இந்த பணியினை அர்ப்பணிப்பு உணர்வுடன் மேற்கொள்ள வேண்டுகிறேன். எனக் குறிப்பிட்டுள்ளார்.

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img