செந்தில் பாலாஜியின் ஜாமின் வழக்கு – மே 06ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

செந்தில் பாலாஜியின் ஜாமின் வழக்கை உச்சநீதிமன்றம் மே 6ம் தேதிக்கு ஒத்திவைத்தது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச்சட்ட வழக்கில் கடந்த 2023- ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14- ஆம் தேதி அன்று அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இதுவரை 35 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது வரும் 30 தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கையை ஏற்று மீண்டும் வாதங்களை முன்வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் ஜாமின் வழக்கை உச்சநீதிமன்றம்
மே 6ம் தேதிக்கு ஒத்திவைத்தது. ஜாமின் கோரி செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை இன்று பதில் மனுத் தாக்கல் செய்தது. இதனையடுத்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கை வருகிற மே 6ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Video thumbnail
கரூரில் செய்த பிழை, இன்று வரை காரணம் சொல்லாத விஜய்? | Karur | TVK | Vijay
05:59
Video thumbnail
பெண்கள் பெயரில் பட்டா.. பெண்களுக்கு முன்னுரிமை.. - அமைச்சர் நாசர் பேச்சு
02:32
Video thumbnail
உணவுப் பற்றாக்குறையற்ற மாநிலம் என்ற அடையாளத்தை தமிழ்நாடு பெற்றிட வழிவகுத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்
10:37
Video thumbnail
அதிமுக கட்சி உடைவதற்கு பாஜக தான் காரணம்
01:07
Video thumbnail
2026-ல் திமுகக்கு பிரகாசமான வாய்ப்பு.. 2வது இடத்துக்கு அதிமுக–தவெக போட்டி
01:14
Video thumbnail
பாஜக ஆர்.எஸ்.எஸ்-யில் ஐக்கியமான நாம் தமிழர் கட்சி
01:16
Video thumbnail
அதிமுகவுக்கு சரியாக கூட்டணி அமையவில்லை
01:00
Video thumbnail
திமுக கூட்டணிக்கு 50–55% வாக்குகள் -உளவுத்துறை கருத்துக்கணிப்பு
01:07
Video thumbnail
ரூ.888 கோடி ஊழல்.. தமிழக டி.ஜி.பி.க்கு அமலாக்கத்துறை கடிதம்
01:15
Video thumbnail
அதிமுக சிதைவுக்கு பிஜேபி தான் காரணம்
01:03
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img