தமிழ்நாடு

வளர்ப்பு மகளை பாலியல் தொல்லை செய்து கொலை – 2 பேர் கைது

மதுரையில் வளர்ப்பு மகளை பாலியல் தொல்லை செய்து கொலை – ராணுவ வீரர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரையில் 11 வயது வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் ராணுவ வீரர் மற்றும் வளர்ப்பு தாய் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாநகர் கோசாகுளம் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமியின் தாய் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். அவருடை தந்தையும் வேறு திருமணம் செய்ததால் சிறுமி மற்றும் அவரது அண்ணன் ஆகிய இருவரும் பெரியம்மா, பெரியப்பா ஆகியோரின் பராமரிப்பில் இருந்துவந்துள்ளார்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பாக சிறுமியின் அண்ணன் கண்மாயில் மூழ்கி உயிரிழந்தார். சிறுமி மட்டும் தனது வளர்ப்பு பெற்றோருடன் இருந்துவந்துள்ளார்.

மதுரை மாநகர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 5ஆம் வகுப்பு படித்துவந்த சிறுமி, பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்துவந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை மாலை சிறுமி கழிவுறைக்குள் சென்றுவிட்டு கதவு திறக்கவில்லை என கூறி அருகில் உள்ளவர்களை வளர்ப்பு பெற்றோர்கள் அழைத்துள்ளனர். அப்போது அருகில் உள்ளவர்கள் வந்தபோது பெற்றோர்களே கதவை உடைத்து சிறுமியை தூக்கி வந்து வள்ளுவர்காலனி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தபோது அங்குள்ள மருத்துவர்கள் அரசு மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரை செய்துள்ளனர்.

இதையடுத்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது சிறுமி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறுமியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி கூடல்புதூர் காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில் உடற்கூராய்வின் போது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

சிறுமி உயிரிழந்தபோது வீட்டில் சிறுமியுடன் இருந்த வளர்ப்பு பெற்றோரான பெரியப்பா செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி சந்திரபாண்டி ஆகிய இருவரையும் அழைத்துச்சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே சிறுமியின் உயிரிழப்பு தொடர்பாக குழந்தைகள் நல அலுவலர்களும் விசாரணை நடத்தினர்.

காவல்துறையினர் வளர்ப்பு பெற்றோரிடம் நடத்திய தீவிர விசாரணையில் சிறுமியின் வளர்ப்பு பெற்றோரான பெரியப்பா செந்தில் குமார் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார். வளர்ப்பு மகளான சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதும் பின்னர் அங்கு வந்த செந்தில்குமாரின் மனைவி சந்திரபாண்டி வளர்ப்பு மகளின் உயிரிழந்த நிலையில் கொலையை மறைக்க முயன்றது விசாரணையில் தெரிய வந்தது.

இருவரையும் கூடல்புதூர் காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் போக்சா நீதிமன்ற நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsdesk

Recent Posts

இயக்குநர் பாராதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்..!

பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…

மார்ச் 25, 2025 9:46 மணி

மார்பகத்தை பிடிப்பது பாலியல் குற்றமில்லையா?? வெட்கக்கேடான தீர்ப்பு – ஸ்வாதி மாலிவால்

பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…

மார்ச் 21, 2025 2:10 மணி

தொகுதி மறுசீரமைப்பு எம்.பி சீட்டுக்கான பிரச்சனை மட்டுமல்ல – வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்..!!

தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…

மார்ச் 21, 2025 11:33 காலை

சற்று குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…

மார்ச் 21, 2025 10:30 காலை

24 மணிநேரமும் செயல்படும் நாட்டின் முதல் ஆன்லைன் நீதிமன்றம்

இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…

நவம்பர் 22, 2024 11:59 காலை

HMMA வின் சிறந்த பின்னணி இசைக்கான விருது – ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ வைரல்

ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…

நவம்பர் 21, 2024 3:54 மணி